AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!!

weather update: இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Jan 2026 06:45 AM IST

சென்னை, ஜனவரி 16: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் மூடு பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக காலை நேரத்தில் முகப்பு விளக்கு ஏரிய விட்டவாரே செல்கின்றனர். அதேசமயம், வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இதனிடையே, கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிகடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று கூறியுள்ளது.

இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

இதன் காரணமாக இன்று (ஜனவரி 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வானிலை நிவலரம்:

தொடர்ந்து, 17-01-2026 முதல் 19-01-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், ஜனவரி 20 மற்றும் 21 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:

அந்தவகையில், இன்றும், நாளையும் தமிழகம், புதுலை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட் வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று குறைவாக இருக்கக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாக இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : சீமான்-விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது…அண்ணாமலை!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஜனவரி 19ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us