Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சீமான்-விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது…அண்ணாமலை!

Annamalai PressMeet : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது என்று தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் .

சீமான்-விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது…அண்ணாமலை!
விஜய்-சீமானை சாதாரணமாக எடை போட முடியாது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 14 Jan 2026 15:04 PM IST

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
சென்னை அருகே வரும் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிரான வாக்குகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வந்து வெற்றிக்கு வழிவகுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தலைவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். சீமானை பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம் என்று கூறுகிறார். விஜயை பொருத்தவரை திமுக வேண்டாம் என்று நினைத்தால், வேறு யார் வேண்டுமென்று அவர் முடிவு செய்ய வேண்டும்.

விஜய்- சீமானை சாதாரணமாக எடை போடவில்லை

ஆனால், பாஜகவை பொறுத்தவரை கொள்கையில் முரண்பாடு இருந்தாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. என்னை பொருத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். தவெக தலைவர் விஜயை நான் சாதாரணமாக எடை போடவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்களை இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளிலும் தமிழக வெற்றி கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் படிக்க: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு

தேர்தல் களத்தில் யாரையும் சுலபமாக எடை போட முடியாது

இதே போல, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரே வேண்டாம் என்று கூறிய நாம் தமிழர் கட்சி 8.5 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது. எனவே, தேர்தல் களத்தில் யாரையும் சுலபமாக எடை போட்டு விட முடியாது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களிடம் சென்று நாங்கள் செய்த திட்டங்களை கூறி வாக்குகளை பெறுவோம். தமிழகத்தில் அதிமுக, திமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகளுடன் சேர்த்து 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக-தேஜ கூட்டணி இடையே போட்டி

வருகின்ற காலங்களில் இது 2 முனை போட்டியாக மாறும். அது திமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போட்டியாக அமையும். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி பிரிவு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. இதே போல, பாமக நிறுவனர் ராமதாஸும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் மிக சரியான முடிவை எடுப்பார் என்று எண்ணுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுகவின் அடுத்தடுத்த மூவ் இதுதான்..