Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்… விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் – விவரம் இதோ

CBI Summons Vijay : கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனவரி 12, 2026 அன்று ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் தற்போது விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்… விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் – விவரம் இதோ
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jan 2026 20:32 PM IST

சென்னை, ஜனவரி 13: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு விஜய் (Vijay) மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் ஜனவரி 19, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி 12, 2026 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

சிபிஐ விசாரணையின் போது, கரூர் துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு விதமாக விஜய்யிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பரப்புரைக்கு விஜய் வந்த நேரம், கூட்டநெரிசல் தொடர்பாக அவருக்கு தெரிவிக்கப்பட்டதா?,கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் அவர் அங்கிருந்து உடனடியாக கிளம்பியது ஏன் உளளிட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ஜன நாயகன் பட தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்..விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி!

மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தமிழக அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை முடிந்த பின்னர், கூடுதல் விளக்கங்கள் மற்றும் சில முக்கிய தகவல்கள் தேவைப்படுவதாகக் கூறி, விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 19, 2026 அன்று ஆஜராகுமாறு அதிகாரப்பூர்வ சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் சென்சார் வழக்கு

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ஜனநயாகன் படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிற ஜனவரி 15, 2025 அன்று விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!

விஜய்க்கு சிபிஐ விசாரணை ஒருபுறமும், ஜனநாயகன் பட சென்சார் வழக்கு ஒருபுறம் என நெருக்கடியாக அமைந்துள்ளது. ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு வெளியிட  தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையடுத்து தங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடமாறு தயாரிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தங்கள் கருத்துக்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என தணிக்கைத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.