Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. அதிகாரிகள் கிடுக்குப்பிடி கேள்வி!!

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த விஜய்க்கு டெல்லி போலீசார் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர்.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. அதிகாரிகள் கிடுக்குப்பிடி கேள்வி!!
டெல்லியில் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jan 2026 12:35 PM IST

டெல்லி, ஜனவரி 12: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த விஜய்க்கு டெல்லி போலீசார் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 27 அன்று விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..

விஜய்க்கு சிபிஐ சம்மன்:

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. எனினும், நேரில் சந்தித்து அவரிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியது. முதல் கட்டத்தில் வழக்கறிஞர்கள் மூலமாக விளக்கம் அளிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சிபிஐ அதனை ஏற்றுக்கொள்ளாததால், விஜய் நேரில் ஆஜராக முடிவு செய்தார்.

டெல்லியில் விஜய்:

அதன்படி, இன்று அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு தனியார் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சிபிஐ அலுவலகம் சென்றார். தொடர்ந்து, சரியாக 11.40 மணிக்கு மேல் தான் விஜய் சிபிஐ அலுவலகத்தை அடைந்தார்.

இதையும் படிக்க : “அதிமுக கூட்டணியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை”.. நயினார் நாகேந்திரன்

விஜய்யிடம் முக்கிய கேள்விகள்:

விஜய்யிடம் சிபிஐ கேட்க உள்ள முக்கிய கேள்விகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

  • “நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது?”
  • “கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?”
  • “மேடையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?”
  • “கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?”
  • “காயமடைந்தவர்கள் பற்றி உடனடி தகவல் கிடைத்ததா?”
  • “மேடையிலிருந்து பின்வாங்குங்கள், அமைதியாக இருங்கள் போன்ற அறிவுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தீர்களா?
  • கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடமிருந்து முன்அனுமதி பெறப்பட்டதா?
  • கூட்ட அளவு, நேரம், பாதுகாப்பு போன்ற காவல்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா?
  • பாதுகாப்பு பணியாளர்கள், தடுப்புகள், நுழைவு–வெளியேற்ற வழிகள் இருந்த‌தா?
  • கூட்டம் திடீரென அதிகரித்ததை யார் கவனித்தனர், என்ன நடவடிக்கை எடுத்தனர்?”