லோகேஷ் ஹீரோ ஆகிட்டாரு… நீங்க ஹீரோவா நடிப்பீங்களா? – அனிருத்தின் கியூட் ரிப்ளை
Music Director Anirudh: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் நாயகனாக நடிப்பாரா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதிலளித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு இசையமைப்பாளராக தனது பணியைத் தொடங்கி தற்போது 14 ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் மொத்தம் 5 படங்களுக்கு இசையமைத்து இருந்தார். பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர் அவ்வபோது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டிலும் அனிருத் இசையில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாக காத்திருக்கின்றது.
இந்த நிலையில் இவரது இசையில் படங்கள் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் மக்களிடையே நிலவும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பதிலளித்துள்ளார். குறிப்பாக நாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கும் அனிருத் ரவிச்சந்தர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.




ஹீரோவா நான் நடிப்பேனா? அனிருத் சொன்ன விசயம்:
லோகேஷ் கனகராஜ் DC-யில் ஹீரோவாக அறிமுகமானார். உங்களுக்கு நடிப்பில் ஏதேனும் திட்டம் உள்ளதா என்று அனிருத் ரவிச்சந்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனிருத், லோகேஷ் கனகராஜிடம் நானும் அதையே சொன்னேன், நீங்கள் ஹீரோவாக நடிக்கிறீர்கள், ஆனால் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன்.
இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. 15 வருடங்களில் இந்த பெரிய பதவியை ரசிகர்கள் எனக்குக் கொடுத்துள்ளனர். ‘இன்னொரு சுற்று போகனும்’ 15 வருடங்கள் போதாது, இசையில் நான் இன்னும் சாதிக்க வேண்டும். நான் இசை வீடியோ & ப்ரோமோவில் மட்டுமே இடம்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Thaai Kizhavi: தாய் கிழவி பட வாய்ப்பு.. சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த பாலா சரவணன்!
இணையத்தில் கவனம் பெறும் அனிருத் ரவிச்சந்தரின் பேச்சு:
Q: #LokeshKanagaraj Debuted as Hero with #DC. Do you have any plans in Acting❓#Anirudh: I told LokeshKanagaraj the same, you act as Hero but I will never do😁. Music is my interest. Audience has given me this huge position in 15 Yrs♥️. ‘Innoru Round Poganum’ 15 Yrs is not… pic.twitter.com/Hflotn5qT5
— AmuthaBharathi (@CinemaWithAB) March 2, 2026
Also Read… சலார் 2 படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்