சலார் 2 படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்
Producer Vijay Kiragandur talks about Salaar 2 Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சலார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் பேசியது வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனாவர்தான் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் பிரபாஸை உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது பாகுபலி படம் தான். இந்தப் படம் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி சமீபத்தில் பாகுபலி தி எபிக் என்று இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைந்து படம் வெளியானது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் சலார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சலார் 2 படம் குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம்:
பிரசாந்த் நீல் சந்தேகத்திற்கு இடமின்றி இன்று பணிபுரியும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர், மேலும் அனைத்து சிறந்த கலைஞர்களையும் போலவே, அவரே அவரது கடுமையான விமர்சகர். உண்மை என்னவென்றால், சாலார் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் OTT தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.
அந்த மிகப்பெரிய அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்படும் சாலார் 2 ஒரு முழுமையான பிரம்மாண்டமாக மாற உள்ளது. அதன் வளர்ச்சி குறித்து நாங்கள் தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கைகளால் நிரம்பி வழிகிறோம், மேலும் மிக விரைவில் தயாரிப்பில் இறங்குவோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்
இணையத்தில் வைரலாகும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்:
Q: With ‘#Salaar2‘ being among the most anticipated films, how are you planning to present it, especially since the director spoke about the first film not performing to his expectations?
Producer Vijay Kiragandur:
– #PrashanthNeel is undoubtedly one of the finest directors… pic.twitter.com/bjyqDAtH2B
— Movie Tamil (@_MovieTamil) March 2, 2026
Also Read… Meesaya Murukku 2: மீசையமுறுக்கு 2 பட முதல் பாடல் ரிலீஸ் எப்போது? அட இந்த நடிகையின் சிறப்பு நடனமா?