AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: துபாயில் தாக்குதல்.. அஜித் குமாரின் நிலைமை என்ன? – மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!

Ajith Kumar Safety: தமிழில் பிரபல கதாநாயகன் மற்றும் கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவந்த நிலையில், ஈரான் துபாய் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில் அஜித்தின் நிலவரம் குறித்து அவரின் மேலாளர் விளக்கம் கொடுத்துள்ளர்.

Ajith Kumar: துபாயில் தாக்குதல்.. அஜித் குமாரின் நிலைமை என்ன? – மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
அஜித் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Mar 2026 15:44 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் மக்கள் மத்தியில் வெறும் கதாநாயகனாக மட்டுமில்லாமல், கார் ரேஸராகவும் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவர் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் இருந்துவருகிறார். மேலும் இதுவரை எந்த படங்களின் ஷூட்டிங்கிற்கு இவர் செல்லவில்லை. துபாயில் (Dubai) இவர் கார் ரேஸ் பணிகளில் தீவிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது அங்கு ஈரான் (Iran) தாக்குதல்களை நடத்திவருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடைப்பெற்றுவருவதாக உலகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுவருகிறது. அமெரிக்காவின் ராணுவ தளங்களை தகர்க்கும் விதத்தில், துபாயின் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. மேலும் துபாயில் பல்வேறு இந்தியர்களும் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த பதற்றமும் எழுந்துவருகிறது.

மேலும் நடிகர் அஜித் குமாரும் அங்குதான் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கும் நிலையில், அவரின் நிலை என்ன என்று ரசிகர்கள் கேட்டுவருகின்றனர். இந்நிலையில் அஜித் குமாரின் நிலைமை குறித்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா (Suresh Chandra) விளக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததே நான் மறந்துவிட்டேன் – ஹாரிஸ் ஜெயராஜ்!

துபாயில் அஜித் குமாரின் நிலைமை குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம் :

அஜித் குமார் தொடர்ந்து துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் தாக்குதல்கள் குறித்த பயம் எழுந்துள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் குமார், பாதுகாப்பான் இடத்தில் நலமாக உள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: அஜித் குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் வீடியோ

அஜித் குமாரின் கார் ரேஸ் குறித்து மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பபிரச்னை மிகவும் முற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையின் காலமாக உலகமெங்கும் உள்ள மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் துபாயில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும், இந்தியாவில் இருக்கும் அவர்களின் குடும்பங்கள் மத்தியிலும் பெரும் பயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர் விரைவில் நிறைவடையவேண்டும் என பலரும் பிராத்தனை செய்துவருகின்றனர்.

Follow Us