AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சந்திர கிரகணம் 2026.. தமிழ்நாட்டில் கிரகணம் தெரியும் நேரம்.. எவ்வளவு நேரம் பார்க்கலாம்?.. முழு விவரம்..

Lunar Eclipse 2026: சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்குத் திசையில் சந்திரன் உதிக்கும் போது இந்த 'பிளட் மூன்' (Blood Moon) எனப்படும் சிவப்பு நிறச் சந்திரனைக் காணலாம்.

சந்திர கிரகணம் 2026.. தமிழ்நாட்டில் கிரகணம் தெரியும் நேரம்.. எவ்வளவு நேரம் பார்க்கலாம்?.. முழு விவரம்..
சந்திர கிரகணம் 2026
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Mar 2026 13:29 PM IST

2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3, செவ்வாய்க்கிழமை) நிகழ்கிறது. இது ‘முழு சந்திர கிரகணம்’ (Total Lunar Eclipse) என்பதால், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் ‘பிளட் மூன்’ (Blood Moon) ஆகக் காட்சியளிக்கும். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் சந்திரன் உதிக்கும் முன்பே கிரகணம் தொடங்கிவிடுவதால், கிரகணத்தின் இறுதிப் பகுதியை மட்டுமே நாம் காண முடியும்.

இதையும் படிக்க: இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. கோவில்களில் மாலை நடை சாத்தப்படுகிறது..

சந்திர கிரகணம் நிகழும் நேரம்:

  • கிரகணத் தொடக்கம் (பகுதி): மதியம் 3:20 மணி
  • முழு கிரகணத் தொடக்கம்: மாலை 4:34 மணி
  • உச்சகட்ட கிரகணம் (Maximum Eclipse): மாலை 5:03 மணி
  • முழு கிரகண முடிவு: மாலை 5:32 மணி
  • கிரகணத்தின் இறுதிப் பகுதி (இந்தியா): மாலை 6:26 முதல் 6:47 வரை

சந்திரன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து ஒவ்வொரு நகரத்திலும் பார்க்கும் நேரம் மாறுபடும். சென்னையில் மாலை 6:17 மணிக்கு சந்திரன் உதிக்கும் போது கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும்.

பார்க்கும் நேரம் (மாலை):

  • சென்னை 6:17 முதல் 6:47 வரை
    மதுரை 6:22 முதல் 6:47 வரை
    கோவை 6:27 முதல் 6:47 வரை
    பெங்களூரு 6:24 முதல் 6:47 வரை
    கொல்கத்தா 5:39 முதல் 6:47 வரை (அதிக நேரம் தெரியும்)
    டெல்லி 6:21 முதல் 6:47 வரை

கிரகணத்தை எப்படி பார்ப்பது?

சந்திர கிரகணத்தைச் சூரிய கிரகணத்தைப் போலன்றி, எவ்வித பாதுகாப்புக் கண்ணாடிகளும் இன்றி வெறும் கண்களால் நேரடியாகப் பார்க்கலாம். மேகமூட்டம் இல்லாத தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்குத் திசையில் நிலவு உதிக்கும் போது சிவப்பு நிற ‘பிளட் மூன்’-ஐ ரசிக்கலாம்.

சூதக காலம் (Sutak Period):

ஆன்மீக நம்பிக்கைகளின்படி, சந்திர கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே ‘சூதக காலம்’ தொடங்கிவிடும். இன்று அதிகாலை 6:23 மணிக்கு தொடங்கிய இந்த சூதக காலம், கிரகணம் முடியும் நேரமான மாலை 6:47 மணி வரை நீடிக்கும். இக்காலத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்று செய்ய வேண்டியவை:

  • கிரகணம் முடிந்தவுடன் வீட்டைச் சுத்தப்படுத்தி, குளித்துவிட்டு இறை வழிபாடு செய்யலாம்.
  • உணவுப் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் தர்பை புல் அல்லது துளசி இலைகளைப் போட்டு வைப்பது கதிர்வீச்சுப் பாதிப்பிலிருந்து தடுக்கும் என நம்பப்படுகிறது.
  • கிரகண நேரத்தில் மந்திரங்களை உச்சரிப்பது அல்லது தியானம் செய்வது பல மடங்கு நன்மைகளைத் தரும்.
  • கிரகணம் முடிந்த பின் ஏழைகளுக்கு உணவு அல்லது தானியங்களைத் தானம் செய்வது சிறப்பு.

இதையும் படிக்க: திருவண்ணாமலை: சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

இன்று செய்யக்கூடாதவை:

  • கிரகண நேரத்தில் சமைப்பதையோ அல்லது சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும் (முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு இதில் விலக்கு உண்டு).
  • கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்; கத்தி, கத்தரிக்கோல் அல்லது ஊசி போன்ற கூர்மையான கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
  • கிரகண நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்பதால், சிலைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Follow Us