AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்த பௌர்ணமியில் தொடங்கிய ‘சத்குரு 360’ – ஆன்மீகமும் வாழ்க்கையும் இணைக்கும் புதிய முயற்சி

ஆன்மீக தேடலில் இருப்போருக்கு, இந்த தொடர் ஒரு அரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. புத்த பூர்ணிமா தினத்தில் தொடங்கிய இந்த பயணம், இனி ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் புதிய எபிசோடுகளுடன் தொடர்ந்து வெளிவரும். சத்குருவின் ஆழமான உள்ளுணர்வுகளை, இதற்கு முன் இல்லாத வகையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த தொடரின் முக்கிய நோக்கமாகும்.

புத்த பௌர்ணமியில் தொடங்கிய ‘சத்குரு 360’ – ஆன்மீகமும் வாழ்க்கையும் இணைக்கும் புதிய முயற்சி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 01 May 2026 19:51 PM IST

மே 1, 2026: ஆன்மீக அறிஞரும், ஈஷா மையத்தின் நிறுவுநருமான சத்குரு ஜக்கி வாசுதேவ், மேலும் ஒரு புதுமையான முயற்சியை தொடங்கியுள்ளார். புத்த பூர்ணிமா முன்னிட்டு, பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட “சத்குரு 360” என்ற சிறப்பு சோலோகாஸ்ட் (Solocast) தொடரை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆன்மீகக் கருத்துகளிலிருந்து சமகால வாழ்க்கை முறை வரை பல்வேறு தலைப்புகளை ஆராய்ந்து, பார்வையாளர்களுக்கு தனது நேர்மையான பார்வையை இந்த தொடரின் மூலம் சத்குரு பகிர உள்ளார்.

முதல் எபிசோடில், “காலத்தின் ஆழமான தன்மை” குறித்து சத்குரு விளக்கமளித்தார். குறிப்பாக, பண்டைய இந்து நாட்காட்டியின் பார்வையில் காலம் எவ்வாறு நம் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை அவர் ஆராய்ந்தார். இந்திய (இந்து) நாட்காட்டி என்பது வெறும் நாட்களை கணக்கிடும் கருவி மட்டுமல்ல; அது மனிதனை பிரபஞ்சத்துடன் எவ்வாறு இணைக்கிறது என்பதையும் சத்குரு விளக்கினார். மகிழ்ச்சி மற்றும் திருப்தி நிறைந்த வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல், பரம ஒற்றுமையை அடைய இந்த பண்டைய முறைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

சத்குரு 360 – சிறப்பம்சங்கள்:

பொதுவாக உள்ள நேர்காணல்கள் அல்லது உரைகளுடன் ஒப்பிடும்போது, இந்த சோலோகாஸ்ட் வடிவம் மாறுபட்டதாகும். இதில் சத்குரு நேரடியாக பார்வையாளர்களுடன் முகாமுகமாக பேசுகிறார் என்ற உணர்வு ஏற்படுகிறது. சிக்கலான ஆன்மீக கருத்துகளையும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், சமகால அம்சங்களுடன் இணைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

Follow Us