AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: விளையாடாமல் கிடைத்த பரிசு.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!

ICC Test Ranking: ஐசிசி அனைத்து அணிகளின் தரவரிசைக்கான சமீபத்திய புதுப்பிப்பை இன்று அதாவது 2026 மே 1ம் தேதி வெளியிட்டது. இந்த வருடாந்திர புதுப்பிப்பின்படி, கடந்த ஒரு ஆண்டில் நடைபெற்ற போட்டிகளுக்கு 100% முக்கியத்துவமும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு 50% முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.

Team India: விளையாடாமல் கிடைத்த பரிசு.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!
இந்திய அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 May 2026 20:04 PM IST

இந்தியாவில் தற்போது ஐபிஎல் (IPL 2026) நடைபெற்று வருவதால், கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச  டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை மறந்துவிட்டனர். 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பும், பின்பும் இந்திய அணி (Indian Cricket Team) பல நாட்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனாலும் ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இது ஆர்ச்சயமான விஷயம் என்றாலும், உண்மை. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது நிலவி வரும் மந்தநிலைக்கு மத்தியில், ஐசிசி தனது சமீபத்திய வருடாந்திர தரவரிசையை அறிவித்துள்ளது. அதில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது.

ALSO READ: இரவோடு இரவாக நாடு திரும்பிய ஒரே அணியைச் சேர்ந்த 3 வீரர்கள்.. ரசிகர்கள் ஷாக்!

ஐசிசி தரவரிசையில் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை:

ஐசிசி அனைத்து அணிகளின் தரவரிசைக்கான சமீபத்திய புதுப்பிப்பை இன்று அதாவது 2026 மே 1ம் தேதி வெளியிட்டது. இந்த வருடாந்திர புதுப்பிப்பின்படி, கடந்த ஒரு ஆண்டில் நடைபெற்ற போட்டிகளுக்கு 100% முக்கியத்துவமும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளுக்கு 50% முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. மேலும், முந்தைய ஆண்டு போட்டிகளின் முடிவுகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதால், தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்:


சமீபத்திய தரவரிசையில் இதுதான் நிகழ்ந்துள்ளது, இதில் 2023-க்கு முந்தைய போட்டி முடிவுகளின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இது, நவம்பர் 2025 முதல் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஐசிசி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா ஒரு இடம் முன்னேறி, இங்கிலாந்தை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியா 104 புள்ளிகளையும், இங்கிலாந்து 102 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இருப்பினும், இந்திய அணி முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட வெகு தொலைவில் உள்ளது.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பை.. ரிஷப் பண்ட் இடத்தை பிடிக்கும் சஞ்சு சாம்சன்!

முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா:

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, மூன்று புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் தனது முன்னிலையை வலுப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தற்போது 131 புள்ளிகளுடன் உள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்று 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம், முதல் 3 அணிகளுக்கும் இடையே தற்போது பல புள்ளிகள் இடைவெளி உள்ளது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு பல டெஸ்ட் தொடர்கள் தொடங்கவுள்ளன. இது தற்போது உள்ள நிலையை மாற்றக்கூடும்.

Follow Us