AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rohit Sharma: உலகக் கோப்பையில் ரோஹித்-க்கு கிடைக்காத வாய்ப்பு.. மன்னிப்பு கேட்ட முன்னாள் தேர்வாளர்..!

Indian Cricket Team: பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக்கூடிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதே அணி நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது என்றும், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வியூக அணுகுமுறை அமைந்திருந்ததாகவும், அதில் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான செயல்பாடு முக்கியப் பங்கு வகித்ததாகவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார்.

Rohit Sharma: உலகக் கோப்பையில் ரோஹித்-க்கு கிடைக்காத வாய்ப்பு.. மன்னிப்பு கேட்ட முன்னாள் தேர்வாளர்..!
ரோஹித் சர்மா - ஸ்ரீகாந்த்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Apr 2026 20:04 PM IST

கடந்த 1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி (Indian Cricket Team) கடந்த 2011ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அப்போது, இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியும், துணை கேப்டனாக யுவராஜ் சிங்கும் இருந்தனர். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ஜாகீர் கான், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றிருந்தனர். இருப்பினும், அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இதுகுறித்து பிசிசிஐ-யின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார். ரோஹித் சர்மாவை (Rohit Sharma) அணியிலிருந்து நீக்கியது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு என்றும் கூறியுள்ளார்.

ALSO READ: மும்பை, சிஎஸ்கே அணிகளுக்கு மீண்டும் திரும்பும் ஜாம்பவான்கள்.. குஷியில் ரசிகர்கள்!

ரோஹித் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை?


பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக்கூடிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதே அணி நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது என்றும், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வியூக அணுகுமுறை அமைந்திருந்ததாகவும், அதில் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான செயல்பாடு முக்கியப் பங்கு வகித்ததாகவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ‘தி வீக்’ பாட்காஸ்டில் அயாஸ் மெமனிடம் பேசிய ஸ்ரீகாந்த், ”ரோஹித்துக்காக நான் இன்னும் வருத்தப்படுகிறேன். கடந்த ஆண்டு அவரிடம் ‘மன்னிக்கவும் பாஸ்’ என்று சொன்னேன். அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை, ஆனால் சில ஓவர்கள் பந்துவீசக்கூடிய வீரர்களையே நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினோம்.

அந்த நேரத்தில் அணியில் வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா மற்றும் யூசுப் பதான் போன்ற பகுதிநேரமாகப் பந்துவீசக்கூடிய பல வீரர்கள் இருந்தனர். இதன் காரணமாக, ரோஹித் சர்மா போன்ற சிறப்பு பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்கவில்லை. 2011 உலகக் கோப்பையின்போது ரோஹித் அணியில் இடம்பிடிக்க முழுத் தகுதி பெற்றிருந்தார், ஆனால் ‘ஹாஃப்-ஆல்ரவுண்டர்’ உத்தியின் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்” என்று கூறினார்.  2011 உலகக் கோப்பையில் விளையாடாதது குறித்து ரோஹித் சர்மா பலமுறை வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா:

எம்.எஸ். தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில், யுவராஜ் சிங் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு ‘தொடர் ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்! இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு ஓய்வா?

2011ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் இல்லையென்றாலும், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் இடம் பிடித்திருந்தார். மேலும், 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்ற அணியிலும் ஒரு பகுதியாக இருந்துள்ளார், ஆனால் இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அதே நேரத்தில், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில், ரோஹித்தின் தலைமையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியாவிடம் தோற்று பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

Follow Us