AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கேமராவுடன் வந்த தீபக் சாஹர்.. பயிற்சியின் போது எம்.எஸ்.தோனி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

MS Dhoni Viral Video: சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி மீது சாஹருக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் அனைவருக்கும் தெரியும். சாஹரின் திருமண முன்மொழிவு கூட தோனியின் ஆலோசனையின் பேரில்தான் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தநிலையில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி பயிற்சியின் போது தோனியை பார்த்த சாஹர், அவரிடம் சென்று பேசினார்.

IPL 2026: கேமராவுடன் வந்த தீபக் சாஹர்.. பயிற்சியின் போது எம்.எஸ்.தோனி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
தீபக் சாஹர் - எம்.எஸ்.தோனிImage Source: Screengrab
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Apr 2026 18:20 PM IST

ஐபிஎல்-இன் ‘எல் கிளாசிகோ’ (IPL 2026) போட்டி நாளை அதாவது 2026 ஏப்ரல் 23ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி, ஒரு பதட்டமான, கடுமையாகப் போராட வேண்டிய போராக அமையும். இருப்பினும், களத்திற்குள் நடக்கப்போகும் இந்தப் போராட்டத்திற்கு மத்தியிலும், இந்த இரு அணிகளின் வீரர்களும் களத்திற்கு வெளியே நட்புறவுடன் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: சஞ்சு சாம்சன் முதல் அபிஷேக் சர்மா வரை.. ஐபிஎல் 2026ல் இதுவரை பதிவான சதங்கள்..!

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான தீபக் சாஹர் தற்போது மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் வீரராக உள்ளார். இருப்பினும், தீபக் சாஹர் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறியிருந்தாலும், அந்த அணியில் உள்ள அனைவராலும் அவர் இன்னும் நேசிக்கப்படுகிறார். மேலும், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி மீது சாஹருக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் அனைவருக்கும் தெரியும். சாஹரின் திருமண முன்மொழிவு கூட தோனியின் ஆலோசனையின் பேரில்தான் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தநிலையில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி பயிற்சியின் போது தோனியை பார்த்த சாஹர், அவரிடம் சென்று பேசினார். தொடர்ந்து, தோனியின் கால்களில் விழுந்து வணங்கினார்.

தோனி ஷாக்:


திடீரெனத் தன் கால்களில் தீபக் சாஹர் விழுந்ததை பார்த்து எம்.எஸ்.தோனி சற்றுத் திகைத்துப்போனார். தீபக் சாஹரைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒளிப்பதிவாளரும் வந்தார். சாஹருடன் ஒரு ஒளிப்பதிவாளர் இருந்ததை எண்ணி தோனி கிண்டல் செய்தார். அப்போது வெளிப்படையாக பேசிய தோனி, ”நீங்கள் உண்மையில் ஒளிப்பதிவாளருடன் இருக்கிறீர்கள். என்னால் உங்களிடம் வெளிப்படையாக பேச முடியாது’ என்றார். இங்கு தோனி சாஹரிடம் பேசிய மொழிதான் குறிப்பிடத்தக்கது. தோனி இந்தியில் பேசாமல், பீகாரி மொழியில் பேசியது கவனிக்கத்தக்கதாக அமைந்தது. தீபக் சாஹர் கால்களைத் தொட்டு வணங்குவது முதல் தோனி பிஹாரி மொழியில் பேசுவது வரை, இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதை வைரலாக்கி வருகின்றனர்.

ALSO READ: மும்பை, சிஎஸ்கே அணிகளுக்கு மீண்டும் திரும்பும் ஜாம்பவான்கள்.. குஷியில் ரசிகர்கள்!

இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி:

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நாளைய போட்டியின் முக்கியத்துவம் மகத்தானது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முறையே 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன. இரு அணிகளும் ஆறு போட்டிகளில் இருந்து தலா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், நாளைய போட்டியில் வெற்றி பெறுவது, இரு அணிகளில் யாரேனும் ஒரு அணிக்கு புள்ளிப் பட்டியலில் மேலே கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், ஒரு அணிக்கு பிளே-ஆஃப் போட்டியில் நுழையவும் உதவும்.

 

Follow Us