IPL 2026: விக்கெட் கீப்பிங்கை கையில் எடுத்த எம்.எஸ்.தோனி.. மும்பைக்கு எதிராக விளையாடுவது உறுதி..?
IPL 2026 MS Dhoni Return: 2026 ஏப்ரல் 21ம் தேதியான இன்று இரவு சுமார் 7 மணியளவில் சென்னை அணி ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. அதில், தோனி பயிற்சியின் போது விக்கெட் கீப்பிங் செய்வதைக் காண முடிந்தது. இதற்கு முன்பு சென்னை அணி, தோனி பயிற்சி செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்திருந்தது. ஆனால் அவற்றில் எதிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வதாகக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இதுவரை களமிறங்கி விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்த 2026 சீசனில் 6 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், கால் தசை காயம் காரணமாக எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சிஎஸ்கே-வின் அடுத்த போட்டி வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெற உள்ளது. இதில் எம்.எஸ். தோனியின் வருகை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதன்படி, எம்.எஸ்.தோனியின் வருகையை சிஎஸ்கே அணி நிர்வாகமே உறுதி செய்துள்ளது.
ALSO READ: ஹர்திக் பாண்ட்யா திட்டினாரா..? லைவ் நிகழ்ச்சியில் ஓபனாக உடைத்த திலக் வர்மா!




தோனி முழு உடற்தகுதியுடன் உள்ளாரா..?
Rule No. 1: Don’t step out when Thala’s behind the stumps
Rule No. 2: Read Rule No. 1 again 😂💪#WhistlePodu #Yellove pic.twitter.com/mPYUIb3yuW— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2026
ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க நாளான கடந்த 2026 மார்ச் 28ம் தேதி கால் தசை காயம் காரணமாக தோனியால் தொடரின் முதல் 2 வாரங்களுக்கு விளையாட முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2 வாரங்களுக்கு மேல் ஆகியும், தோனி இன்னும் திரும்பவில்லை. ஆனால், தற்போது அந்த அணி நிர்வாகம் அவரது வருகை குறித்து ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.
எம்.எஸ். தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவாரா?
2026 ஏப்ரல் 21ம் தேதியான இன்று இரவு சுமார் 7 மணியளவில் சென்னை அணி ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. அதில், தோனி பயிற்சியின் போது விக்கெட் கீப்பிங் செய்வதைக் காண முடிந்தது. இதற்கு முன்பு சென்னை அணி, தோனி பயிற்சி செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்திருந்தது. ஆனால் அவற்றில் எதிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வதாகக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தோனியின் தோற்றம், அடுத்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவார் என்பதை உறுதி செய்கிறது.
தோனி மும்பைக்கு எதிராக விளையாடினால், அது இந்த ஐபிஎல் 2026 சீசனில் அவரது முதல் போட்டியாக இருக்கும். இருப்பினும், அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்பதை சென்னை அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ALSO READ: ஐபிஎல் 2026ல் ஆயுஷ் மத்ரேவும் அவுட்.. காயத்தால் சிக்கி தவிக்கும் சிஎஸ்கே..!
மோசமான நிலையில் சிஎஸ்கே:
ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை சென்னை அணி மோசமான நிலையில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, மீதமுள்ள நான்கில் தோல்வியடைந்துள்ளது. சிஸ்கே அணி 4 புள்ளிகளையும், -0.780 என்ற நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவணையில் 8வது இடத்தில் உள்ளது.