AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026ல் ஆயுஷ் மத்ரேவும் அவுட்.. காயத்தால் சிக்கி தவிக்கும் சிஎஸ்கே..!

Ayush Mhatre Ruled Out: சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரே, இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயுஷ் மத்ரேவின் விலகலை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடினமான காலகட்டத்தை கடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கில் தோல்வியடைந்துள்ளது.

IPL 2026: ஐபிஎல் 2026ல் ஆயுஷ் மத்ரேவும் அவுட்.. காயத்தால் சிக்கி தவிக்கும் சிஎஸ்கே..!
ஆயுஷ் மத்ரே காயம்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Apr 2026 16:14 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரே, இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயுஷ் மத்ரேவின் விலகலை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடினமான காலகட்டத்தை கடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கில் தோல்வியடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே, எம்.எஸ்.தோனி, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் காயத்தில் இருந்து விலகியுள்ளனர்.

ALSO READ: வேகம் காட்டிய மும்பை.. சோகத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல் லேட்டஸ்ட் இதோ!

ஆயுஷ் மத்ரேவுக்கு என்ன ஆனது..?

மத்ரே தொடர்பாக அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஏப்ரல் 18 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது ஏற்பட்ட இடது தொடை தசைநார் காயம் காரணமாக, ஆயுஷ் மத்ரே ஐபிஎல் 2026-ன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆயுஷின் காயத்திற்கு 6 முதல் 8 வாரங்கள் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படும்” என்று எழுதியுள்ளது.

சென்னை அணிக்காக அதிக ரன்கள்:

ஆயுஷ் மத்ரே ஐபிஎல் 2026 சீசனில் சென்னை அணிக்காக 6று லீக் போட்டிகளில் விளையாடி, 6 இன்னிங்ஸ்களில் 33.50 சராசரி மற்றும் 177.87 ஸ்டிரைக் ரேட்டுடன் 201 ரன்கள் எடுத்தார். இதில், இரண்டு முக்கியமான அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் 2026 சீசனில் ஆயுஷ் மத்ரேவின் அதிகபட்ச ஸ்கோர் 73 ஆகும். இதுவரை சென்னை அணியின் அதிக ரன்கள் எடுத்தவர் ஆயுஷ் மத்ரே ஆவார். இந்த பட்டியலில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 192 ரன்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ALSO READ: இது என் பிரச்சனை இல்லை.. பும்ரா குறித்த கேள்விக்கு ஹர்திக் கொடுத்த பதில்!

ஆயுஷ் மத்ரேயின் ஐபிஎல் வாழ்க்கை:

ஆயுஷ் மத்ரே 2025 ஐபிஎல் சீசனில் அறிமுகமாகி, இந்த 2 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை தனது ஐபிஎல் வரலாற்றில் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, அவர் 33.92 சராசரி மற்றும் 183.75 ஸ்டிரைக் ரேட்டுடன் 441 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் மத்ரே மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். இதில் மத்ரேவின் அதிகபட்ச ஸ்கோர் 94 ஆகும்.

Follow Us