AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கேவுக்கு தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்தால் பரபரப்பு!

Chennai Super Kings: ஹைதராபாத் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எம்.எஸ். தோனியின் முக்கியத்துவத்தை முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆதித்ய தாரே வலியுறுத்தியுள்ளார். இதுபோலவே, போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனுபவம் தேவையாக இருந்தது. இது சென்னையின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. 

IPL 2026: சிஎஸ்கேவுக்கு தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்தால் பரபரப்பு!
எம்.எஸ்.தோனி - சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2026 14:58 PM IST

 ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings) மோதியது. இந்த போட்டியில் சென்னை அணியை ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் 3வது வெற்றியை பதிவு செய்தது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எம்.எஸ். தோனியின் முக்கியத்துவத்தை முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆதித்ய தாரே வலியுறுத்தியுள்ளார். இதுபோலவே, போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனுபவம் தேவையாக இருந்தது. இது சென்னையின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.

ALSO READ: மீண்டும் தோல்வியில் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல் நிலைமை என்ன?

ஆதித்ய தாரே கூறியது என்ன..?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஜியோஸ்டாரில் பேசிய ஆதித்ய தாரே, ”5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியில் ஒப்பீட்டளவில் இளம் வீரர்கள் இருப்பதால், விக்கெட் கீப்பராகவும் வழிகாட்டியாகவும் தோனியின் இருப்பு அந்த அணிக்கு பெரிதும் பயனளிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ். தோனி முன்னெப்போதையும் விட இப்போது தேவைப்படுகிறார். எம்.எஸ். தோனி விளையாடும் தகுதியுடன் இருந்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக எந்த வகையிலாவது அவர் விளையாடியே ஆக வேண்டும். தோனி ஸ்டம்புகளுக்குப் பின்னால் மிகச் சிறப்பாகச் செயல்படுபவர் என்பதால், முழு 20 ஓவர்களும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். சஞ்சுவின் விக்கெட் கீப்பிங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் அந்த அனுபவம் தேவை” என்று கூறினார்.

அறிமுக வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் உள்ளிட்ட சிஎஸ்கே-வின் இளம் வீரர்களுக்கு, தோனியின் தலைமைப் பண்பு எவ்வளவு முக்கியம் என்பதை தாரே கூறினார். அதில், “சிஎஸ்கே அணியில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அவர்களது அறிமுக வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய இருவருக்கும் தோனி போன்ற அனுபவமிக்க ஒருவரின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. எம்.எஸ். தோனி எப்போதுமே ருதுராஜுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் ஒரு சிறந்த ஆதரவாக இருந்து வருகிறார். அவர் பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து பேசி, அவர்களுக்கு வழிகாட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணிக்கு ஒரு கூடுதல் பலத்தை அளிக்கும்” என்று  கூறினார்.

ALSO READ: புது சிக்கல்.. சிஎஸ்கே அணியை துரத்தும் கஷ்டகாலம்.. முக்கிய வீரர் வெளியேற வாய்ப்பு?

ஐபிஎல் 2025-க்கு முன்னதாக, தோனியை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு ‘அறிமுகமில்லா வீரராக’ தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தக்கவைப்பு ஐபிஎல் 2026-க்கும் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட இந்த சீசனில் விளையாடவில்லை.

 

Follow Us