AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சஞ்சு சாம்சன் முதல் அபிஷேக் சர்மா வரை.. ஐபிஎல் 2026ல் இதுவரை பதிவான சதங்கள்..!

IPL 2026 Season Centuries List: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களும் ஐபிஎல் 2026 தொடரில் சதம் அடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், 2026 வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்து, ஐபிஎல் 2026 தொடரின் முதல் சதமடித்த வீரர் ஆனார். சாம்சனின் இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

IPL 2026: சஞ்சு சாம்சன் முதல் அபிஷேக் சர்மா வரை.. ஐபிஎல் 2026ல் இதுவரை பதிவான சதங்கள்..!
திலக் வர்மா - அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Apr 2026 16:39 PM IST

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக (Indian Cricket Team) வென்று கொடுத்த வீரர்கள் சிலர் ஐபிஎல் 2026 சீசனில் சதம் அடித்து அசத்தியுள்ளனர். அதன்படி, இந்த பட்டியலில் தற்போது அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவும் இணைந்துள்ளார். ஐபிஎல் 2026-ன் (IPL 2026) முதல் சதம் சஞ்சு சாம்சனிடம் இருந்து வந்தது. அதன்பிறகு, இரண்டாவது சதத்தை திலக் வர்மா, மூன்றாவது சதம் அபிஷேக் ஷர்மாவும் அடித்துள்ளனர். இந்த மூன்று சதங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான அம்சம் உள்ளது. அது என்னவென்றால், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இந்த சதங்களை அடித்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பதுதான்.

ALSO READ: விக்கெட் கீப்பிங்கை கையில் எடுத்த எம்.எஸ்.தோனி.. மும்பைக்கு எதிராக விளையாடுவது உறுதி..?

இந்தியாவை உலக சாம்பியனாக்கிய நாயகன்:

கடந்த 2026 மார்ச் 8ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றது மட்டுமல்லாமல், அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கினர். 2026 டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்து, சஞ்சு சாம்சன் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். அதேநேரத்தில், திலக் வர்மா இதுவரை 9 போட்டிகளில் 207 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், அபிஷேக் சர்மா 158-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் 141 ரன்கள் எடுத்து இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்கு பங்களித்தார்.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களும் ஐபிஎல் 2026 தொடரில் சதம் அடித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், 2026 வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்து, ஐபிஎல் 2026 தொடரின் முதல் சதமடித்த வீரர் ஆனார். சாம்சனின் இந்த இன்னிங்ஸில் 15 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

திலக் வர்மா ஐபிஎல் 2026 தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். வருகின்ற 2026 ஏப்ரல் 20ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வீரரான திலக் வர்மா, 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். இதில், 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களும் அடங்கும். இது திலக் வர்மாவின் முதல் ஐபிஎல் சதமாகும்.

ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்! இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு ஓய்வா?

திலக் சதம் அடித்த 24 மணி நேரத்திலேயே, ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது சதம் பதிவானது. சன்ரைசர்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் அபிஷேக் சர்மா, 10 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் விளாசினார். அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் சில காலமாக ஃபார்ம் இல்லாமல் தத்தளித்து வந்தது. டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் போதும் அவர் தடுமாறினார். இருப்பினும், நேற்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், அபிஷேக் சர்மா மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பதை நிரூபித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 2 சதங்கள்:

ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் அனைத்தும், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கும் முக்கியப் பங்காற்றிய அதே வீரரிடமிருந்துதான் வந்துள்ளன என்பது தெளிவாகிறது. மேலும், ஐபிஎல் 2026 தொடரின் முதல் 3 சதங்களில் 2, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us