ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியானது பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி பட டீசர்
I Nobody Movie Official Teaser Out Now | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஐ நோபடி படம். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமார். மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகர்களான சுகுமாரன் மற்றும் மல்லிகாவின் இளைய மகன் தான் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாரிசு நடிகர் என்ற காரணத்திற்காக என்றாலும் அவரது கடின உழைப்பு பான் இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதன்படி ஒவ்வொரு படத்திற்காகவும் தொடர்ந்து தனது உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தை மாற்றி அமைத்து ரசிகர்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த மொழிகளில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரின் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரின் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பள்ளிச்சட்டம்பி என்ற படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




வெளியானது பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி பட டீசர்:
இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ நோபடி. இந்தப் படத்தை இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கி உள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், ஷங்கர் ராமகிருஷ்ணன், நக்ஷத்ரா, ஐரா, நிஷாந்த் சாகர், நந்து, நௌஷாத் பாம்பே, ஜிஜோய் ராஜகோபால், காலித் ரஹ்மான், சஞ்சு சிவராம், சுதி கொப்பா, பீனா சந்திரன், கிருஷ்ணா அல்தாஃப், கிருஷ்ணா அல்தாஃப், கிருஷ்ணா அல்தாஃப், வர்கீஸ், மனோஜ் கே.யு, இர்ஷாத் அலி, சுதி கோழிக்கோடு, மகேந்திரன், ஆல்பின் அலெக்ஸ், ஜித்தின் மதனன் என பலர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பில்லாவும் ரங்காவும் – வைரலாகும் போட்டோ
பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Presenting the first teaser of I, NOBODY. In theatres July 2026!https://t.co/vHhnM4DuXX #INobody #NisamBasheer #SameerAbdulvahid #SupriyaMenon@e4echennai @cvsarathi @PrithvirajProd #e4experiments@E4Emovies @homescreenent @jakes_bejoy @harrisdesom @parvatweets… pic.twitter.com/3HFWuv3PR9
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 1, 2026
Also Read… Ajith Kumar: அதுதான் எனது ஆசை.. ஆனால் டைமே கிடைக்கவில்லை – அஜித் குமார் சொன்ன சுவாரஸ்ய விஷயம்!