AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நரசிம்மர் ஜெயந்தி 2026: வரலாறு…. வழிபாட்டு பலன்கள்…!

Narasimha Jayanti 2026: நரசிம்மர் அவதாரம் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது முக்கிய அவதாரமாகும், பக்தனை காக்க எடுத்தது. இரணியகசிபுவின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர, மனித-சிங்க ரூபத்தில் அந்தி நேரத்தில் அவதரித்து அவனை வதம் செய்தார். நரசிம்மர் ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் மனவலிமை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 29 Apr 2026 15:50 PM IST
நரசிம்மர் மனித-சிங்க ரூபத்தில் அந்தி நேரத்தில் அவதரித்தார். வீட்டின் வாசற்படியில் வைத்து ஆயுதமின்றி நகங்களால் இரணியனை வதம் செய்தார். அதன் பின்னர் அவர் சாந்தமடைந்து லட்சுமி நரசிம்மராக அருள்பாலித்தார். நரசிம்மர் ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

1 / 5
கோபமடைந்த இரணியன் மகனை பலமுறை கொல்ல முயன்றான். ஆனால் நாராயண அருளால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. ஒரு நாள் தூணில் இறைவன் உள்ளாரா என்று கேட்டு அதை உடைத்தான்.
அந்த தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டு அவனை எதிர்கொண்டார்.

கோபமடைந்த இரணியன் மகனை பலமுறை கொல்ல முயன்றான். ஆனால் நாராயண அருளால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. ஒரு நாள் தூணில் இறைவன் உள்ளாரா என்று கேட்டு அதை உடைத்தான். அந்த தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டு அவனை எதிர்கொண்டார்.

2 / 5
இரணியனின் மகன் பிரகலாதன் சிறுவயதிலேயே நாராயண பக்தனாக இருந்தான். “ஓம் நமோ நாராயணாய” என்று எப்போதும் ஜபம் செய்து வந்தான். அதை தடுக்க முயன்ற இரணியன் அவனை தன்னை வணங்கச் சொன்னான். ஆனால் பிரகலாதன் இறைவனை மட்டுமே வணங்குவேன் என்று உறுதியுடன் இருந்தான்.

3 / 5
இரணியகசிபு என்ற அசுரன் கடுமையான தவம் செய்து பல வரங்களை பெற்றான். அவன் தேவர், மனிதர், மிருகம் யாராலும் கொல்ல முடியாதவனாக ஆனான். இதனால் அவன் மூவுலகையும் ஆட்சி செய்து தன்னைத் தானே கடவுள் என கூறினான். அவன் கொடுமையால் தேவர்கள் மற்றும் முனிவர்கள் துன்புற்றனர்.

4 / 5
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாக நரசிம்மர் அவதாரம் முக்கியமானது.
தர்மத்தை காக்கவும், தீமையை அழிக்கவும் இந்த அவதாரம் எடுத்தார். பக்தனை காப்பாற்ற இறைவன் எங்கும் இருப்பார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். நரசிம்மர் அவதரித்த நாளே நரசிம்மர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாக நரசிம்மர் அவதாரம் முக்கியமானது. தர்மத்தை காக்கவும், தீமையை அழிக்கவும் இந்த அவதாரம் எடுத்தார். பக்தனை காப்பாற்ற இறைவன் எங்கும் இருப்பார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். நரசிம்மர் அவதரித்த நாளே நரசிம்மர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

5 / 5
Follow Us