AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவண்ணாமலை: சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

Giri Valam in Tiruvannamalai During Lunar Eclipse: திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பக்தர்கள் தடையின்றி கிரிவலம் செல்லலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரகண காலத்தில் வழிபாடு செய்வது இருமடங்கு நற்பலன்களைத் தரும் என்பதால் பக்தர்கள் பெரும் உற்சாகத்துடன் கிரிவலத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

திருவண்ணாமலை: சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?
திருவண்ணாமலைImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 Mar 2026 12:02 PM IST

மாசி பவுர்ணமி கிரிவலமானது 2025 மார்ச் 02 இன்று மாலை 6.29 மணிக்குத் தொடங்கி மார்ச் 03 நாளை மாலை 5.52 மணி வரை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 03 நாளை மாலை சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் பக்தர்கள் கிரிவலம் செல்ல எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. கிரகண காலத்தில் கிரிவலம் செல்வது பக்தர்களுக்கு இருமடங்கு புண்ணியத்தைத் தரும் என்றும், குறிப்பாகத் தேவர்கள் தவம் செய்யும் இந்த நேரத்தில் தியானம் மேற்கொண்டால் 100 மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் கிரகண நேரத்தில் கிரிவலம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

பஞ்ச பூதத் தலங்களில் ‘நெருப்பு’த் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்களின் புனித பூமியாகக் கருதப்படுகிறது. “நினைத்தாலே முக்தி தரும் தலம்” என்ற பெருமைக்குரிய இந்த ஆலயத்தில், சிவபெருமான் மலையையே வடிவாகக் கொண்டு எழுந்தருளியுள்ளார். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலில், நான்கு திசைகளிலும் பிரம்மாண்டமான கோபுரங்கள் உள்ளன. இதில் ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. மாசி மாத பவுர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலம் என்பதால், இந்த நாளில் கிரிவலம் வருவது பாவங்களை நீக்கி புண்ணியத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

Also Read: மாசி பெளர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

சந்திர கிரகணமும் கிரிவலப் பலன்களும்

மாசி மாத பவுர்ணமி கிரிவலமானது 2026 மார்ச் 02 இன்று மாலை 6.29 மணிக்குத் தொடங்கி, 2026 மார்ச் 03 நாளை மாலை 5.52 மணி வரை நீடிக்கிறது. அதே வேளையில் 2026 மார்ச் 03 நாளை மாலை சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. பொதுவாக கிரகண காலத்தில் சுப காரியங்களைத் தவிர்ப்பது வழக்கம் என்றாலும், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது குறித்து சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் குருக்கள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்வது இருமடங்கு பலன்களைத் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிரகணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமேயான ஒரு நிகழ்வு என்றும், இறைவனுக்கு அது பொருந்தாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

பக்தர்களுக்கான அறிவுரைகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்

கிரகண காலத்தில் தேவர்கள் தவம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த புனிதமான நேரத்தில் தவம் அல்லது தியானம் மேற்கொண்டால் 100 மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, நதிக்கரைகள் மற்றும் தீர்த்தக் குளங்களின் கரைகளில் அமர்ந்து இறைவனை வழிபடலாம். இருப்பினும், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் கிரகண சமயத்தில் கிரிவலம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Follow Us