Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். அங்கு அவரிடம் அடுத்தடுத்து 2 நாட்களுக்கு விசாரணை நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணைகளை முடித்த பின், விஜய் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார் எனத் தெரிகிறது.

தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Jan 2026 08:37 AM IST

சென்னை, ஜனவரி 11: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனது புதிய பிரசாரத் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக சார்பில் கடைசியாக கடந்த டிசம்பர் 16ம் தேதி ஈரோட்டில் செங்கோட்டையன் தலைமையில், விஜய்யின் பிரம்மாண்ட பொதுகூட்டம் நடந்தது. அதன்பின், ஜனநாயகன் ரிலீஸ் பணிகளில் விஜய் பிஸியானார். தொடர்ந்து, பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மலேசியாவில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நிகழ்ந்தது. தனது கடைசி பட ரிலீஸ் என்பதால், அதற்கான பணிகளை பார்த்து பார்த்து செய்து அவருக்கு பேரிடியாக சென்சார் போர்டு வந்தது. சென்சார் சான்றிதழ் தராமல் கடைசி நாள் வரை படக்குழுவை திண்டாட வைத்தது. தொடர்ந்து, நீதிமன்றம் சென்றபோதும், அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால், விஜய் கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!

பட ரிலீஸூக்காக மக்கள் சந்திப்பை ஒத்திவைத்த விஜய்:

ஏனெனில், பொங்கல் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு, ஒரு வாரத்திற்கு தனது படத்தை தமிழகம் முழுவதும் குடும்பங்கள் கொண்டாடும் என திட்டமிட்டிருந்தார். குறிப்பாக படத்தில், தனது அரசியல் வருகைக்கு ஏற்றாற்போல் பல கட்சிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனால், ஜனநாயகன் படமும் ஒரு மறைமுக தேர்தல் பிரச்சாரமாகவே இருக்கும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், கடைசியில் படம் வெளியாகுமா என்பதே கேள்விக்குறி என்ற நிலைக்கு சென்றுவிட்டது. பட ரிலீஸ் பணிகள் காரணமாகவே, தனது அரசியல் பிரச்சாரங்களை சற்று நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், அதுவும் ரிலீஸாகமல் போய், மக்கள் சந்திப்பும் ரத்தாகி என அடுத்தடுத்து தடை ஏற்பட்டது.

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்:

இதனிடையே, கடந்த டிசம்பர் 22ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிதயில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், விஜய் கலந்துக்கொண்டு குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். இந்நிலையில், தைப்பொங்கலுக்கும் அதேபோல் ஒரு சமத்துவ பொங்கல் கொண்டாடலாம் என தவெக சார்பில் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், ஜனநாயகன் பட ரிலீஸ் ஒத்திவைப்பால், அந்த நிகழ்ச்சிக்கான பணிகளும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் விஜய்:

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். அங்கு அவரிடம் அடுத்தடுத்து 2 நாட்களுக்கு விசாரணை நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணைகளை முடித்த பின், விஜய் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார் எனத் தெரிகிறது. ஏற்கெவனே, ஈரோட்டை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பொதுக்கூட்டம் சேலத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க: 16வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு!!

தருமபுரி (அ) சேலத்தில் அடுத்த சந்திப்பு:

அந்தவகையில், தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், மீண்டும் செங்கோட்டையன் தலைமையில் சேலம் அல்லது தருமபுரியில் பிரமாண்ட மக்கள் சந்திப்பை விரைவில் தவெக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, அந்த மக்கள் சந்திப்பை இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்தவும், அந்த நிகழ்வில், தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்து அனுப்பிய தவெக கட்சியின் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.