தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!
TVK Leader Vijay: தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான நிகழ்ச்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒத்தி வைத்ததுடன், விஜய் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரிதளவில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தனது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தார். இதை தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான பணிகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜன நாயகன் படம் வெளியீட்டில் சென்சார் தொடர்பான சிக்கல் நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
பனையூரில் கட்சி நிகழ்ச்சிகள் வேண்டாம்
இதனிடையே, வருகிற திங்கள்கிழமை ( ஜனவரி 12) கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். இந்த இரு சம்பவங்களால் பனையூரில் கட்சி சார்ந்த எந்த நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, மற்ற கட்சி தலைவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட எந்த கட்சி சார்ந்த விஷயங்களையும் சிறிது காலத்துக்கு மேற்கொள்ள வேண்டாம் எனவும் விஜய் கூறியுள்ளாராம்.
மேலும் படிக்க: லேப்டாப்பில் கருணாநிதி-ஸ்டாலின் படம் நீக்கம்….மாணவர்களே கவனம்…எல்காட் நிறுவனம் எச்சரிக்கை!




சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிக்கும் நோ
பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், ஜனநாயகன் பட சென்சார் விவகாரம், சிபிஐ விசாரணை ஆகிய காரணங்களால் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியையும் விஜய் ரத்து செய்வதாக கூறப்படுகிறது. இதனால், பனையூரில் கட்சி நிகழ்ச்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தை உள்ளிட்ட எந்த வகையான தேர்தல் பணிகளும் நடைபெறாமல் அமைதியாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
கட்சி வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை
ஆனால், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை மட்டும் அறிவித்து விட்டு, சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கான பணிகளில் விஜய் இறங்கியுள்ளாராம். டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் போது, சிபிஐ அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதில் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக தனது கட்சி சார்ந்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் அறிந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆக மொத்தத்தில் ஜன நாயகன் பட விவகாரம் மற்றும் சிபிஐ விசாரணை ஆகியவற்றால் விஜய் மூடு அவுட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் 2- ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணை…பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி!