“கூட்டணி பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தடை”.. செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு!!
நேற்றைய தினம் கடலூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்ததற்கு பதிலளித்தார். அதன்படி, காங்கிரஸ் எப்போதும் கொல்லைப்புறமாக அரசியல் செய்யாது, நேர்மையான அரசியல் செய்யும் இயக்கம். எந்த காலத்திலும் தரகர் வேலை செய்வது காங்கிரஸ் பேரியக்கத்தின் வேலையல்லை என்றார்.
சென்னை, ஜனவரி 10: கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தனியாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதோடு, இனி கூட்டணி பற்றி பொதுவெளியில் நிர்வாகிகள் யாரும் பேசக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்து, பேசி வருவது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது இந்த சர்ச்சையை மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் தலைமை அவர்களை கண்டிக்காததும் விமர்சனமாக எழுந்தது.
இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?
காங்கிரஸ் குறித்து விஜயபிரபாகரன் பகிரங்க விமர்சனம்:
இந்நிலையில், நேற்றைய தினம் கட்சி நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக்கூடாது என அறிக்கை வாயிலாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார். இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைய தினம் கடலூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்ததற்கு பதிலளித்தார். அதன்படி, காங்கிரஸ் எப்போதும் கொல்லைப்புறமாக அரசியல் செய்யாது, நேர்மையான அரசியல் செய்யும் இயக்கம். எந்த காலத்திலும் தரகர் வேலை செய்வது காங்கிரஸ் பேரியக்கத்தின் வேலையல்லை. இனி வரும் காலத்திலும் அந்த வேலை காங்கிரஸூக்கு கிடையாது என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது:
எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. கட்சியின் தேசியத் தலைமை இந்தியா கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்துவற்கு ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக கிரிஷ் சோடங்கர் இருக்கிறார். அவரும், தவெக உள்ளிட்ட வேறு யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை, திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி என தெளிவிப்படுத்தியுள்ளார்.
கூட்டணி குறித்து பொதுவெளயில் பேசக்கூடாது:
இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? நானும் கூறிவிட்டேன், கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட தலைவரும் விளக்கமளித்துவிட்டார். இதற்கு மேல் இந்த சர்ச்சைக்கு எப்படி பதிலளிப்பது? என்று அவர் கடிந்துக்கொண்டார். மேலும், எங்கோ, யாரோ ஏதேனும் கருத்து கூறினால், உடனே அதனை ஊடகங்களில் பெரிதாக்கி விடுகின்றனர். கூட்டணியை பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ காங்கிரஸ் நிர்வாகிகள் யாரேனும் இனி பொதுவெளயில் பேசினால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
வரம்பை மீறிய செயல்:
கூட்டணி பற்றி அகில இந்திய தலைமையும், அவர்களால் நியமிக்கப்பட்ட தலைவரும் தான் பேச வேண்டும். இடையே வேறு யார் பேசினாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் சீட்கள், உள்ளாட்சியில் ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைளை நிர்வாகிகள் வைத்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அந்த கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிடம் அளிக்கலாம். தலைமயிடம் அளிக்கலாம். அதை தவிர்த்து பொதுவெளியில் எத்தனை தொகுதி என்பது குறித்து பேசுவது வரம்பை மீறிய செயல் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!
அகில இந்திய தலைமை ஒரு குழுவை நியமித்து என்ன பேசு வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அப்படியென்றால், அந்தக்குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? அல்லது நிர்வாகிகள் பொதுவெளியில் தனிப்பட்ட முறையில் பேசுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என்றார்.