Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக – அதிமுகவுக்கு சமமான கட்சியே தவெக”.. கிருஷ்ணசாமி தடாலடி!!

திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கக் கூடாது என நான் மாநாட்டில் பேசியது உண்மை. தமிழகத்தில் இனிமேல் ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விஜய் மட்டும் தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறுகிறார் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

“திமுக – அதிமுகவுக்கு சமமான கட்சியே தவெக”.. கிருஷ்ணசாமி தடாலடி!!
கிருஷ்ணசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jan 2026 08:56 AM IST

மதுரை, ஜனவரி 10: அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கு சமமாக தான் விஜய்யின் தவெகவையும் அரசியல் தரத்தில் பார்ப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி தரப்பு பாமக, தாமாக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதேசமயம், திமுக தரப்பில் தற்போது வரை கூட்டணி குறித்து புதிதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. எனினும், காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மேற்கொண்ட அதே கூட்டணி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?

தவெக – தேமுதிக – அமமுக – புதிய தமிழகம்?

எனினும், அரசியல் என்பது திருப்பங்கள் நிறைந்தது என்பதால், யாரும் எதிர்பார்க்காத நிகழ்வுகளும் நடைபெறலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்படி, தமிழக அரசியல் களம் தேர்தல் நெருங்குவதால், பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆட்சியில் பங்கு என்று அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக, தற்போது தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தவெக தரப்பில் தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாறு இறுதிக்குள் கூட்டணி நிலைப்பாடு:

அதேசமயம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸை தவிர்த்து வேறு எந்த கட்சியும், கூட்டணி மாற்றத்தை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. காங்கிரஸிலும் ஒரு சில தலைவர்கள் மட்டுமே தவெகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம், கட்சி தலைமையின் நிலைப்பாடு என்பதும் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இம்மாத இறுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை விமர்சித்த கிருஷ்ணசாமி:

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தற்போதைய அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் மாற்றங்களைப் பற்றி கருத்து தெரிவித்தார். நடப்பு திமுக அரசு, தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. நிறைவேற்றியதாக விளம்பரப்படுத்தப்படும் வாக்குறுதிகளும் உண்மையாக மக்களிடம் சென்று சேரவில்லை. அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!

திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கக்கூடாது:

திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கக் கூடாது என நான் மாநாட்டில் பேசியது உண்மை. தமிழகத்தில் இனிமேல் ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விஜய் மட்டும் தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறுகிறார். அவர் உண்மையில், அதே நிலைப்பாட்டில் தொடர்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுகவில் உள்ள பலர் என்னுடன் பேசி வருகிறார்கள். மாநாட்டுக்கு முன் விஜய் கட்சியிலிருந்து மிகவும் முக்கியமான நபர்கள் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கு சமமாக நான் விஜய் கட்சியையும் அரசியல் தளத்தில் பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.