சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருகிறது நவீன மாற்றம்…மகிழ்ச்சியில் பயணிகள்!
Central Railway Station: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கு அறை உள்ளிட்டவை நவீனமயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதறகாக தகுதியான நிறுவனங்களுக்கு ஆன்லைன் வழியாக ஏலம் விடுவதற்காக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் பொது மக்கள் மத்தியில் விர்க்க முடியாத ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தை தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஆன்மீகம், சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினம்தோறும் ஏராளமான பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.இங்கு வரும் பயணிகளுக்காக ரயில் நிலையத்தில் தங்கும் அறைகள், ஓய்வு அறைகள் உள்ளன. இந்த அறைகளை ரயில்வே நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில், தற்போது இவை நவீன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ரயில் நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் வசதி மற்றும் ரயில் நிலையத்தில் வசதிகளை அதிகரிக்கும் வகையில், புதுப்பித்தல், இயக்குதல், பராமரித்தல், ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அறை
அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது உள்ள 9 குளிர்சாதன வசதி உடைய படுக்கை அறைகள் மற்றும் ஆண்கள் தங்கும் கூடத்தில் உள்ள 23 குளிர்சாதன படுக்கை அறைகள், பெண்கள் தங்கும் கூடத்தில் உள்ள 5 படுக்கை அறைகள் மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்கள் உள்ளிட்டவை முழுமையாக சீரமைக்கப்பட உள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கான் கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் இருந்து வணிக நிறுவனங்கள், ரயில் நடைமேடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பயணிகள் எளிதாக அடைய முடியும்.
மேலும் படிக்க: போகிப் பண்டிகை: இதையெல்லாம் எரிக்காதீங்க.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!




பயணிகளுக்கு கூடுதல் வசதியை அளிக்கும்
இது, பயணிகள் தங்கும் நேரத்தில் கூடுதல் வசதியை அளிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, இந்த ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள வசதிகள் குறுகிய காலம் தங்கும் அறைகளுக்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் வழியான ஏலம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாகும்
மேலும், இந்த ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் இடங்களை சீரமைத்து, பராமரிப்பதற்கான ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் என்றும், இதனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், இந்த காலவரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கு அறைகள் நவீன முறையில் சீரமைக்கப்பட்ட உள்ளதால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ரயில் நிலைத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும் படிக்க: மழைக்கு ரெடியா மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. தொடரும் கனமழை..