Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழைக்கு ரெடியா மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. தொடரும் கனமழை..

Tamil Nadu Weather Alert: ஜனவரி 10, 2026 தேதியான இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கு ரெடியா மக்களே.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. தொடரும் கனமழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jan 2026 06:15 AM IST

வானிலை நிலவரம், ஜனவரி 10, 2026: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது, பட்டிக்கோலாவிலிருந்து கிழக்கு – வடகிழக்கு 120 கிலோமீட்டர் தொலைவிலும், திருகோணமலை தென்கிழக்கில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், பொட்டுவில் வடக்கு – வடகிழக்கில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு – தென்கிழக்கு 590 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடற்கரை பகுதிகளான திருகோணமலை – ஜாப்னா இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

அந்த வகையில், ஜனவரி 10, 2026 தேதியான இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுரையில் ஜன.23-இல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்…தேஜ கூட்டணி தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஜனவரி 11, 2026 தேதியான நாளை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 12, 2026 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 13 முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜனநாயகன்…பராசக்திக்கு சிக்கல்… சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் சென்சார் போர்டு – முதல்வர் கண்டனம்

சென்னை நகரை பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.