பொங்கல் சிறப்பு ரயில்கள்.. காலை 8 மணிக்கு தொடங்கிய டிக்கெட் முன்பதிவு..
Pongal Special Train: பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான, டிக்கெட் முன்பதிவுகள் ஜனவரி 4, 2026 தேதியான இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்வே இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 4, 2026: தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் பண்டிகை இன்னும் ஒரு சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இதற்காக, தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 4, 2026 தேதியான இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டத்திற்கு ஏற்றவாறு இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி இலட்சக்கணக்கான மக்கள் பேருந்து மற்றும் ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினம் தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க: ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..
20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்கள்:
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக,
- நாகர்கோவில் – தாம்பரம்
- குமரி – தாம்பரம்
- நாகர்கோவில் – நெல்லை – செங்கல்பட்டு
- எழும்பூர் – தென்காசி
- ராமேஸ்வரம் – தாம்பரம்
- எழும்பூர் – கோவை – சென்னை
- போத்தனூர் உள்ளிட்ட
20 வழித்தடங்களில் மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் ஜனவரி 8, 2026 முதல் ஜனவரி 21, 2026 வரை இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்:
இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜனவரி 4, 2026 தேதியான இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்வே இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நான் தான் கடவுள்.. கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றி பிரச்சனை செய்த நபர்.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு..
வழக்கமான ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளதால், பயணிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நீண்ட விடுமுறை ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.