Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்துக்கு வரும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்…சேவை எப்போது தொடங்குகிறது..பயணிகள் மகிழ்ச்சி!

3 Amrit Bharat Trains: தமிழகத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவை எப்போது தொடங்குகிறது. ரயிலில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்துக்கு வரும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்…சேவை எப்போது தொடங்குகிறது..பயணிகள் மகிழ்ச்சி!
தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Jan 2026 11:06 AM IST

இந்தியாவில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இருக்கை வசதியுடன் மட்டும் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த ரயிலுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. ஏசி வசதி இல்லாத இந்த ரயிலானது தமிழகத்தில் ஈரோடு- பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு- மேற்கு வங்கம் இடையே புதிதாக மூன்று அம்ரிக் பாரத் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்

அதன்படி, இந்த 3 அம்ரித் பாரத் ரயிலானது தாம்பரம் முதல் சந்திரகாச்சி வரையும், மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குர் முதல் திருச்சி வரையும், நாகர்கோவிலில் இருந்து ஜல்பாய்குரி வரையும் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவில் முதல் ஜல்பாய்குரி வரை இயக்கப்படும் ரயிலானது திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, குண்டூர் வழியாக ஜல்பாய்குரியை சென்றடையும்.

மேலும் படிக்க: மின்சார வாகனம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. நெடுஞ்சாலைகளில் வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்..

ஜல்பாய்குரி டூ திருச்சி வழித்தடம்

இதே போல, ஜல்பாய்குரியில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக திருச்சியை சென்றடையும். இதே போல, தாம்பரம் முதல் சந்திரகாச்சி வரையிலான அம்ரித் பாரத் ரயிலானது சென்னை எழும்பூர், சூலூர் பேட்டை, நெல்லூர் வழியாக சந்திரகாச்சி சென்றடையும். இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணம் செய்யலாம்.

அம்ரித் பாரத் ரயிலில் உள்ள அம்சங்கள்

இந்த ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது மணிக்கு சுமார் 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ஐசிஎஃப்-இல் இந்த ரயில்கள் தயார் செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் இயக்கத்தின் முக்கிய நோக்கம் நீண்ட தூர பயணத்தை பயணிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவது, 800 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள நகரங்களை இணைப்பது ஆகும்.

குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள்

இந்த ரயிலில் குளிர்சாதன வசதி இல்லாத ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சேவையானது அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது வந்தே பாரத் ரயிலுக்கு இணையாக பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெரும் என்று கூறப்படுகிறது. இதனால், சாதாரண நடுத்தர மக்களும் இந்த ரயிலில் பயணம் செய்யலாம்.

மேலும் படிக்க: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருகிறது நவீன மாற்றம்…மகிழ்ச்சியில் பயணிகள்!