Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“என்னய்யா காசு, பணம்”.. இதுதான் எங்கள் சொத்து.. விஜயகாந்த் மகன் உருக்கமாக பேச்சு!!

இன்று எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ வீடு வைத்திருக்கிறார்கள். கேப்டன் கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டி அந்த வீட்டிற்குள் இதுவரை குடியேற முடிந்ததா? அதே சாலிகிராமம் வீட்டில் தான் தற்போது வரை இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒருநாளாவது வருந்தியிருப்போமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“என்னய்யா காசு, பணம்”.. இதுதான் எங்கள் சொத்து.. விஜயகாந்த் மகன் உருக்கமாக பேச்சு!!
விஜயபிரபாகரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Jan 2026 13:43 PM IST

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் டிவி, ஆண்டாள் அழகர் கல்லூரி உள்ளிட்டவற்றை இழந்தது குறித்து அவரது மகன் விஜயபிரபாகரன் உருக்கமாக பேசியுள்ளார். தேமுதிகவின் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக பிரேமலதா கடந்த 3 மாதங்களாக கூறிவந்தார். ஆனால், கூட்டத்தில் கூட்டணியை முடிவு செய்துவிட்டோம். தற்போதே கூட்டணியை அறிவித்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. பெரிய கட்சிகளே இன்னும் கூட்டணியை அறிவிக்காமல் இருக்கின்றனர். அதனால், நாம் மட்டும் ஏன் முந்திக்கொட்டை போல் அவசரப்பட வேண்டும். பொருமையாக இருக்கலாம், தை பிறந்தால் வழி பிறக்கும். பொங்கலுக்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று வந்த தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த விஜயபிரபாகரன்:

அதேசமயம், கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனின் பேச்சு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக அதில் தாங்கள் இழந்த சொத்துகள் குறித்து அவர் பேசியது அனைவரிடத்திலும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி சேரும் கட்சிகளிடம் பெட்டி பெட்டியாய் பணத்தை வாங்கிக் கொண்டதாக தேமுதிக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் பேசியிருந்தார்.

ஓபன் சேலஞ்ச் விடுத்த விஜயபிரபாகரன்:

அதாவது, ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிக பேரம் பேசுகிறது, பேரம் பேசுகிறது என்று விமர்சனங்கள் எங்கள் மீது வைக்கப்படுகிறது. என்ன பேரம் பேசினாம்? பெட்டி வாங்கினோமா? நான் ஒரு ஓபன் சேலஞ்ச் விடுகிறேன். 2005க்கு முன் கேப்டனுக்கு என்ன சொத்து இருந்தது, 2026ல் தற்போது கேப்டன் குடும்பத்திற்கு என்ன சொத்து இருக்கிறது? என்று ஒப்பனாக சேலஞ்ச் செய்கிறேன் என்றார்.

கேப்டன் டிவி, அழகர் கல்லூரி எங்கே?

இலவசமாக கல்லூரி கட்டிக்கொடுத்தார். இன்று அந்த கல்லூரி நம்மிடம் இருக்கிறதா? கேப்டன் டிவி நம்மிடம் இருக்கிறதா? என்ன இருக்கிறது? நீங்கள் இருக்கிறீர்கள். வேறு எதுக்கும் எங்களுக்கு பயமில்லை. கேப்டன் மோதிரம் என்னிடம் இருக்கிறது. 2015ல் இருந்து தற்போது வரை ஒரே ஒரு இன்னோவா கார், ஃபோர்டு என்டேவர் கார் மட்டுமே வைத்திருக்கிறோம்.

2015ல் வாங்கிய 2 கார்கள் மட்டுமே உள்ளது:

இன்று எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ வீடு வைத்திருக்கிறார்கள். கேப்டன் கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டி அந்த வீட்டிற்குள் இதுவரை குடியேற முடிந்ததா? அதே சாலிகிராமம் வீட்டில் தான் தற்போது வரை இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒருநாளாவது வருந்தியிருப்போமா? எங்களிடம் இருந்தெல்லாம் போய்விட்டதே என்று? இதற்கெல்லாம் பயந்தால், அரசியல் பண்ண முடியாது தம்பிகளா என்று உணர்ச்சிப்பொங்க பேசினார். குறிப்பாக அவரது பேச்சு விஜயகாந்தின்,  “என்னய்யா காசு, பணம்.. மக்கள் சோறு போடுவாங்க” என்ற அவரது எமோஷனல் பேச்சை கண் முன்னாள் நிறுத்தியது போல் இருந்ததாக தொண்டர்கள் வருந்தினர்.

முடங்கிய கேப்டன் டிவி:

உண்மையில் தற்போது கேப்டன் டிவி ஒளிபரப்பில் இல்லை. தற்போது யூட்யூப் சேனல் அளவில், தேமுதிக நிகழ்ச்சிகளை மட்டும் பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே, அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது ஆண்டாள் அழகர் கல்லூரியையும் விற்பனை செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியிருந்தால் எதற்காக குடும்ப சொத்துகளை விற்கும் நிலை அந்த குடும்பத்திற்கு வரப்போகிறது என தேமுதிக தொண்டர்கள் உருக்கம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!

விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு:

முன்னதாக, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் வேட்புமனுவில் தனக்கு ரூ.17 கோடிக்கு சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் 6.57 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.