Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அதிமுக கூட்டணியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை”.. நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அதிமுக கூட்டணியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை”.. நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Jan 2026 12:26 PM IST

கோவை, ஜனவரி 11: அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக சர்ச்சை நிலவுவதாக பேசப்பட்டது. அதோடு, பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என பாஜகவும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தங்கள் கூட்டணியில் எந்த சர்ச்சையும் இல்லை என கூறியுள்ளார்.

இதையும் படிக்க: தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..

முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான்:

மேலும், தங்கள் கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் தான் என்றார். ஆட்சியில் பங்கு வேண்டும், அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று பாஜக இதுவரை அதிமுக கூட்டணியில் அழுத்தம் கொடுக்கவில்லை. கூட்டணியில் பாஜக. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இபிஎஸ் இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாமகவை சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். தேமுதிகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொங்கல் பண்டிகை முடியட்டும், மேலும் பலர் கூட்டணிக்கு வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்.

பராசக்தி படம் ரிலீஸானது முதல்வருக்கு தெரியாதா?

அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைக்கிறோம்:

தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பாஜக குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார்.

இதையும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!

டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்:

தொடர்ந்து, பொங்கல் விழாவில் பங்கேற்க நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். மத்திய இணை அமைச்சர் சார்பில் டெல்லியில் ஜன.13ல் பொகஙல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவின் போது தமிழ்நாடு அரசியல் நிலவரம், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து அமித்ஷா கேட்டறிய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.