Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Minister Rajakannappan: பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த கட்சி திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டணி குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!
திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Jan 2026 17:22 PM IST

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்பு உள்ளதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். இது தொடர்பாக கன்னியாகுமரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகர்கோவில் மாவட்டம், வடசேரியில் அரசு ரப்பர் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, மதுரைக்கு வரும் ஜனவரி 17-ஆம் தேதி வருகை தரும் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்கப்படும். இதே போல, அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி. எல். ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதல்வரிடம் வைக்கப்படும்.

குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்படும்

காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை இருப்பதாக புகார் வரப் பெற்றுள்ளது. அந்த குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிகளில் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில், சிங்கவால் குரங்குகள் மலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் என்பதால், அவை குடியிருப்பு பகுதிகளில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வன பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!

ரப்பர் பூங்கா அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதால் இது குறித்து எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும். கேரளாவில் தனியார் காடுகள் என்ற சட்டம் அமலில் இருக்கும் இடங்களில் பணிகள் செய்ய நிர்பந்திப்பது கிடையாது. எனவே, கேரளாவில் உள்ள சட்டங்களுக்கும், தமிழக சட்டங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. கேரளாவில் அதிக அளவிலான மலைகள் உள்ளன. தமிழகத்தில் மலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு

எனவே, அதன் அடிப்படையில் நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் காடுகள் சட்டத்தால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு…டிஜிபி-யிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை!