Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!

Kanyakumari Ferry Service: கன்னியாகுமரியில் பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, விவேகானந்தர் சிலைக்கான படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து சேவை செயல்பாட்டில் இருக்கும்.

பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!
கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் அதிகரிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Jan 2026 16:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மிக சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு, கடல் பகுதியில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் அதன் அருகில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இந்த இரு சுற்றுலா இடங்களையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அண்மையில் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் சாதாரண நாட்களில் குறைந்த அளவே பொதுமக்கள் கூட்டம் காணப்படும். இதுவே விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவு காணப்படும். இதற்காக கடற்கரை பகுதியில் இருந்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து சேவை இருந்து வந்தது. தற்போது கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து சேவை வழங்கப்படவில்லை. விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு சேவை இருந்து வருகிறது. இருந்தாலும், ஏராளமான சுற்றுலா பகுதிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

படகு சவாரி 3 மணி நேரமாக அதிகரிப்பு

இந்த நிலையில், போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என அடுத்தடுத்து விடுமுறை வருகிறது. இதனால், கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதற்காக, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் படகு சேவை 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது, வரும் ஜனவரி 15- ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும் படிக்க: 1970-களின் ராஜா…சென்னையில் மீண்டும் களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!

வழக்கமான படகு சேவை

கன்னியாகுமரியில் படகு சேவையானது துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து விவேகானந்தர் மண்டபம் வரை இருந்து வருகிறது. அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், அதன் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வருகின்றனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகு போக்குவரத்து சேவையானது வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை

தற்போது பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, அடுத்தடுத்து விடுமுறை வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப படகு போக்குவரத்து சேவை மேலும் 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து சேவையானது இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு முன்னதாகவே காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைய வேண்டியதை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியும்.

மேலும் படிக்க: குப்பை என நினைத்த பையில் 45 பவுன் நகை…மறுகணமே தூய்மை பணியாளர் செய்த செயல்…நேர்மையுடம் வாழும் தம்பதி!