டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை.. 4 டிகிரி வரை குறையும் வெப்பநிலை – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: ஜனவரி 12, 2026 தேதியான இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 12, 2026: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7 செ.மீ, காக்காச்சி (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி) தலா 5 செ.மீ, குன்னூர் PTO (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), குன்னூர் AWS (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4 செ.மீ, கேத்தி (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), கொடைக்கானல் படகுக் குழாம் (திண்டுக்கல்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி) தலா 3 செ.மீ,
கின்னக்கோரை (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: குப்பை என நினைத்த பையில் 45 பவுன் நகை…மறுகணமே தூய்மை பணியாளர் செய்த செயல்…நேர்மையுடம் வாழும் தம்பதி!
டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழை:
அதேபோல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜனவரி 12, 2026 தேதியான இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 13, 2026 தேதியான நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 1970-களின் ராஜா…சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!
4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை:
அதனைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை இருக்கும் என்றும், ஏனைய பகுதிகள் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.