ஊட்டியாக மாறும் சென்னை.. அடுத்த 7 நாட்களுக்கு இது தான் நிலை – பிரதீப் ஜான்..
Tamil Nadu Weather Update: கடந்த இரண்டு நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்களில் லேசான முதல் மிதமான மழை மட்டுமே பதிவானது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. அதாவது, அதிகாலை நேரத்தில் கடும் குளிரும், பகல் நேரங்களில் குளிர்ந்த காற்றும் இருந்தது என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வானிலை நிலவரம், ஜனவரி 12, 2026: சென்னை, கோவை, சேலம், அதிர்ச்சி, நாகை, தஞ்சாவூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளது. பகல் நேர வெப்பத்திலும் இரவு நேர வெப்பத்திலும் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரத்தில் வெப்பநிலை 20 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருந்துள்ளது. இந்த நிலை ஜனவரி 12, 2026 தேதியான இன்றும் தொடரும். அதனைத் தொடர்ந்து நாளை முதல் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும், இரவு நேரங்களில் மட்டும் அதிகப்படியான குளிர் இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்யும் மழை:
தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் வடகடலோர தமிழகமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. அதிகாரிகள் கிடுக்குப்பிடி கேள்வி!!
இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த நாட்களில் லேசான முதல் மிதமான மழை மட்டுமே பதிவானது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்பட்டது. அதாவது, அதிகாலை நேரத்தில் கடும் குளிரும், பகல் நேரங்களில் குளிர்ந்த காற்றும் இருந்தது என வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வரும் நாட்களில் சென்னையில் கடும் குளிர் இருக்கும் – பிரதீப் ஜான்:
Hardly any difference between night and day temp. It was special day in Chennai and other cities in Tamil Nadu. Even in hillstations the trend was same.
—————
The day temp will another chill day today and from tomorrow the day temp will be close to 28 C. Note Sunday the… pic.twitter.com/8IEf3WnBuF— Tamil Nadu Weatherman (@praddy06) January 12, 2026
அதில், பகல் நேர வெப்பநிலையும் இரவு நேர வெப்பநிலையும் பெரிய அளவு மாற்றமின்றி இருக்கிறது. மலைப்பகுதிகளிலும் இதே சூழல்தான் நிலவுகிறது. ஜனவரி 12, 2026 தேதியான இன்றும் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் வெப்பநிலை 24 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். நாளை முதல் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இது ஒன்றிலிருந்து இரண்டு டிகிரி செல்சியஸ் மட்டுமே வித்தியாசமாக உள்ளது.
மேலும் படிக்க: 1970-களின் ராஜா…சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!
மேகக் கூட்டங்கள் கலைந்த பிறகு, இரவு நேர வெப்பநிலை மேலும் குறையக்கூடும். குறிப்பாக பொங்கல் விடுமுறைகளை ஒட்டி, இரவு நேர வெப்பநிலை சென்னையில் 18 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். எனவே, இரவு நேரம் முதல் அதிகாலை நேரம் வரையில் கடும் குளிர் இருக்கும். மலைப்பிரதேசங்களிலும் இதே நிலைதான். டெல்டா முதல் கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னைப் பொறுத்தவரையில் மிதமான சாரல் மழை இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.