Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குப்பை என நினைத்த பையில் 45 பவுன் நகை…மறுகணமே தூய்மை பணியாளர் செய்த செயல்…நேர்மையுடம் வாழும் தம்பதி!

45 Pounds Jewelry: சென்னையில் சாலையில் கிடந்த 45 பவுன் தங்க நகை பையை பெண் தூய்மைப் பணியாளர் மீட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த நகையை தவற விட்ட நபரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு தூய்மை பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குப்பை என நினைத்த பையில் 45 பவுன் நகை…மறுகணமே தூய்மை பணியாளர் செய்த செயல்…நேர்மையுடம் வாழும் தம்பதி!
சாலையில் கிடந்த 45 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Jan 2026 14:21 PM IST

சென்னை டி நகர் பகுதியில் உள்ள முப்பாத்தம்மன் கோயில் தெருவில் தூய்மைப் பணியாளர்கள் துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சாலையோரம் ஒரு பை ஒன்று கிடந்தது. இதனை தூய்மை பணியாளர் பத்மா என்பவர் பையை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் இருந்த பொருளை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான சுமார் 45 பவுன் தங்க நகைகள் இருந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நகை பையை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பத்மா ஒப்படைத்தார். இந்த நகை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஏற்கெனவே, நகை காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ரமேஷ் என்ற நபரை பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு போலீசார் வரவழைத்து உரிய ஆவணங்களை பெற்று ஆய்வு செய்த பின்னர் அந்த நகைகளை ஒப்படைத்தனர்.

குப்பை என்று எடுத்த பையில் 45 பவுன் நகை

அப்போது, தூய்மை பணியாளர் பத்மாவை நகையின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர். இது குறித்து தூய்மை பணியாளர் பத்மா கூறுகையில், நான் சுமித் என்ற நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறேன். நான் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை குப்பை என்று நினைத்து எடுத்தேன். அதை பிரித்து பார்த்த போது, அதில் நகை இருந்தது. உடனே, எனது மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டேன்.

மேலும் படிக்க: 1970-களின் ராஜா…சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய டபுள் டக்கர் பேருந்து…என்னவெல்லாம் ஸ்பெஷல்!

கணவரை பார்த்து வந்த நேர்மை எண்ணம்

இந்த நகையை பார்த்தபோது, அதை தவறவிட்ட நபரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று எனது மனது எண்ணியது. இதே போல, எனது கணவருக்கும் சாலையில் பணம் கிடைத்தது. அந்த பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்தார். இதே போல, எனக்கும் அந்த எண்ணம் வந்தது. இது தொடர்பாக பத்மாவின் கணவர் கூறியதாவது: நான் ஆட்டோர ஓட்டுநராக பணி புரிந்த வருகிறேன். ஒரு நாள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் கருப்பு நிற பை கிடந்தது.

பணத்தை தவற விட்டவர்களின் முகத்தில் சோகம் மறைந்து மகிழ்ச்சி

அந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது. உடனே, அந்த பணப் பையை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்தேன். அப்போது, அந்த பணத்தை தவற விட்டவர்களின் முகத்தில் இருந்த சோகம் மறைந்து, சிரிப்பு வந்தது. அதை பார்க்கும் போது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நகையை நாங்கள் எடுத்துச் சென்றிருந்தால், சாப்பிடும் போது அது எங்களுக்கு உள் மனது உறுதி கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ஊட்டியாக மாறும் சென்னை.. அடுத்த 7 நாட்களுக்கு இது தான் நிலை – பிரதீப் ஜான்..