Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘பொங்கலுக்கு குட் நியூஸ்’ – உயரும் மகளிர் உரிமைத் தொகை? அமைச்சர் சொன்ன தகவல்

Women’s Allowance Hike: தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்கள் பயனடைந்துவரும் நிலையில், பொங்கலுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுகிறதா என பலரும் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

‘பொங்கலுக்கு குட் நியூஸ்’ – உயரும் மகளிர் உரிமைத் தொகை? அமைச்சர் சொன்ன தகவல்
ஐ.பெரியசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jan 2026 20:26 PM IST

திண்டுக்கல், ஜனவரி 11 : தமிழ்நாடு பெண்களுக்கு பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு இனிப்பு செய்தி வெளியாகும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் ஜனவரி 11, 2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், பொங்கல் பண்டிகை முடிவதற்குள் தமிழ்நாடு பெண்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அந்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்” என்று தெரிவித்தார். இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற ஊகங்கள் உருவாகியுள்ளன.

பொங்கலுக்கு குட் நியூஸ்

திண்டுக்கல் மாநகராட்சியில் திமுக.சார்பில் ஜனவரி 11, 2025 அன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, பொங்கலை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “அதிமுக கூட்டணியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்கவில்லை”.. நயினார் நாகேந்திரன்

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000  நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார். 

‘கூட்டணி ஆட்சி கிடையாது’

காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என்ற முறயில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களின் உரிமை. இங்கு எப்போதும் கூட்டணி ஆட்சி கிடையாது. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வரும் உறுதியாக இருக்கிறார் என்றார்.

இதையும் படிக்க : தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, 1000 ரூபாய் போதாது என்றும், அதை உயர்த்த வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு தான் அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கலுக்கு இனிப்பான செய்தி என அவர் பேசியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் யூகங்களை பகிர்ந்து வருகின்றனர். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.