வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுகவின் அடுத்தடுத்த மூவ் இதுதான்..
வரும் வாரம் முதல் தேர்தல் பணிகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை இறுதி செய்துவிடும் எனத் தெரிகிறது. அந்தவகையில், திமுகவும் பொங்கலுக்கு பின் தனது அடுத்தடுத்த நகர்களில் வேகமெடுக்க திட்டமிட்டு வருகிறது.
சென்னை, ஜனவரி 14: வரும் ஜனவரி 19ம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் மூம்முரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக இதில், “தை பிறந்ததும் வழி பிறக்கும்” என பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து வந்தன. அப்படியிருக்க, நாளை தை மாதம் பிறக்கிறது. இதையொட்டி, வரும் நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவத்தை எட்டும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்:
அதன்படி, வரும் வாரம் முதல் தேர்தல் பணிகள் தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை இறுதி செய்துவிடும் எனத் தெரிகிறது. அந்தவகையில், திமுகவும் பொங்கலுக்கு பின் தனது அடுத்தடுத்த நகர்களில் வேகமெடுக்க திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்ள ஒரு குழுவை அக்கட்சி அமைத்திருந்தது. அந்தக்குழு ஜன.19ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. கடந்த தேர்தலில் திமுக வழங்கிய 505 வாக்குறுதிகளில் 404-க்கும் மேற்பட்டவற்றை செயல்படுத்தியுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




திராவிட மாடல் 2.0:
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டத்தை வடிவமைக்கும் திராவிட மாடல் 2.0-க்கு துவக்கமாக தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை, தேர்தல் அறிக்கை வெறும் ஆவணமாக அல்லாமல், மக்களின் நிஜ தேவைகள், விருப்பங்கள், கருத்துகளை பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பிரகடனமாக உருவாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். கடந்த தேர்தலில் திமுக வழங்கிய 505 வாக்குறுதிகளில் 404-க்கும் மேற்பட்டவற்றை செயல்படுத்தியுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் கொண்ட குழு:
ஒவ்வொரு குடிமகனின் குரலும் இதில் இடம்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு மாநிலம் முழுவதும் பயணம் செய்து, பொதுமக்கள், நிர்வாகிகள், துறைகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நேரடியாக கருத்துகளை கேட்டு சேகரிக்க உள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ள இக்குழு, பிப்ரவரி 4 மற்றும் 5 அன்று அண்ணா அறிவாலயத்தில் பல துறைகளை சேர்ந்த நிபுணர் குழுக்களுடன் கூடுதல் ஆலோசனை நடத்த உள்ளது.
இதையும் படிக்க: டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!!
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
தொடர்ந்து, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜனவரி 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் விரிவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.