சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு… விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமது இல்லத்தில், பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பொங்கல் விழாவை தமிழிசை செளந்தரராஜன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்தார்.
சென்னை, ஜனவரி 15 : சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு, நடிகர் விஜய் தை 1 ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு என தெரிவித்தது தேர்தலுக்காக இருக்கலாம் என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமது இல்லத்தில், பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பொங்கல் விழாவை தமிழிசை செளந்தரராஜன் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து, பாஜக மகளிர் அணியினருடன் ‘மோடி பொங்கல், என்டிஏ பொங்கல் என்ற கோஷங்களுடன் அவர் நடனமாடிய நிகழ்வும் கவனம் பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய்யின் வாழ்த்தை விமர்சித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமருடன் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பராசக்தி படக்குழுவினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தைத் திருநாள், பொங்கல் வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸின் கோர முகத்தை வெளிப்படுத்திய படம் ‘பராசக்தி’. அந்த படக்குழுவின் பங்கேற்பு பாஜகவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. விஜய் நடிகராக இருந்திருந்தால் அவரையும் அழைத்திருப்போம். ஜனநாயகன் படம் வந்தால்தான் பொங்கல்’ என்று விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள்; அப்போது அவர்களுடனும் நாமும் கொண்டாடுவோம்” என்றார்.
இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு அரசு பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் நடிகர்களை அழைக்கும் போது கேள்வி எழுவதில்லை. ஆனால் பாஜக அழைத்தால் மட்டும் பிரச்னையாகிறது. டெல்லியில் தமிழ் திரையுலகக் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை நாம் பெருமையாக பார்க்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடியது, அவர் தமிழர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான சான்று என்றார்.
இதையும் படிக்க : சீமான்-விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது…அண்ணாமலை!
விஜய்யின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கு விமர்சனம்
மேலும் பேசிய அவர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றாலும், சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு. தை மாதத் தொடக்கத்தை தமிழ் புத்தாண்டு என விஜய் கூறியது தேர்தல் காரணமாக கூட இருக்கலாம். ‘ஜனநாயகன்’ விவகாரம் அல்லது சிபிஐ விவகாரம் எதுவாக இருந்தாலும், அதில் பிரதமர் மோடியை இழுப்பது தவறு. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக பதற்றமடைந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ஹிந்தி திணிப்பு என உதயநிதி கூறுவது எப்படி? நேற்று நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி தமிழர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெளிவானது. ராகுல் காந்தி தேர்தல் காரணங்களுக்காக மோடியை விமர்சித்து வருகிறார் என்றார்.



