ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..
தமிழ்நாட்டின் உற்பத்தி வலிமைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் ஒரு புதிய டயர் உற்பத்தி வசதியை நிறுவவும், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் எம்ஆர்எப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச் 4, 2026: தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்காக ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசு தரப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் வியட்நாம் கார் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
5,300 கோடி மதிப்பீட்டில் டயர் தொழிற்சாலை:
எம்ஆர்எப் நிறுவனம் இந்தியாவில் 10 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியிருந்தாலும், தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் — அதாவது திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் — தனது உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.
ரூ.5,300 கோடி முதலீடும், ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டம் அமைகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1000 பேருக்கு வேலைவாய்ப்பு:
In a major boost to Tamil Nadu’s manufacturing strength, we signed an MoU with @MRFworldwide to establish a new tyre manufacturing facility at #SIPCOT Iluppaikudi in #Sivagangai district with an investment of Rs. 5300 crore, creating around 1000 jobs and further strengthening our… pic.twitter.com/WOzK2mMFPH
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 4, 2026
அதில், “தமிழ்நாட்டின் உற்பத்தி வலிமைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் ஒரு புதிய டயர் உற்பத்தி வசதியை நிறுவவும், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் எம்ஆர்எப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.
மேலும் படிக்க: உறுதியான திமுக காங்கிரஸ் கூட்டணி.. எத்தனை இடங்கள் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..
மேலும், கடல் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாட்டை உலகளாவிய நீலப் பொருளாதாரத்தில் முன்னணி மையமாக நிலைநிறுத்தவும் ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை 2026’-ஐயும் வெளியிட்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன டயர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்காக கிரீன் பீல்ட் உற்பத்தி வசதியை அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.