Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிபிஐ விசாரணை…விஜய் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்!

Karur Stampede Case CBI Inquiry : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சிபிஐ விசாரணை…விஜய் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்!
சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி பயணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Jan 2026 12:37 PM IST

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, கடந்த ஜனவரி 12- ஆம் தேதி ( திங்கள்கிழமை) டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜராகி இருந்தார். அங்கு, அவரிடம் சிபிஐ காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகை மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை காரணமாக விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இன்று மாலை டெல்லி புறப்படும் விஜய்

இதனை ஏற்ற சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 19-ஆம் தேதிக்கு ( திங்கள்கிழமை) விசாரணையை ஒத்தி வைத்தனர். அதன்படி, நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீண்டும் தனி விமான மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை திட்டமிட்டபடி விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…

விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

கடந்த ஜனவரி 12- ஆம் தேதி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்த விஜயிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இதில், கரூர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார். நிகழ்ச்சி குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டதா. கரூர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தது ஏன். அதிக அளவிலான கூட்டம் கூடியிருந்த நிலையில், நீங்கள் பயன்படுத்திய பிரச்சார வாகனம் கூட்டத்தின் வழியாக எப்படி சென்றது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர்.

தவெக நிர்வாகிகளிடம் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சி பி ஐ விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியதின் அடிப்படையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: சென்னை உலா பேருந்து…நேர அட்டவணை-பயணிக்கும் வழித்தடம் வெளியீடு!