Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குன்னூர் அருகே திடீர் மண் சரிவு.. 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி.. பெரும் சோகம்..

landslide near Coonoor: எதிர்பாராத விதமாக மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த 3 இளைஞர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் முதலில் அப்துல் ரகுமான் என்ற இளைஞர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

குன்னூர் அருகே திடீர் மண் சரிவு.. 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி.. பெரும் சோகம்..
குன்னூர் அருகே திடீர் மண் சரிவு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Jan 2026 11:49 AM IST

நீலகிரி, ஜனவரி 18: குன்னூர் அருகே நடைபெற்ற வீடு கட்டும் பணியின் போது, ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓதனட்டி என்ற பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அங்கு இப்பணிகள் நடைபெற்று வந்தநிலையில், நேற்று எதிர்பாராத விதமாக அங்கு திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 3 வடமாநில தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு நடந்த சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…

30 அடி உயர மண் சரிந்து விழுந்தது:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓதனட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்ட அஸ்திவாரம் தோண்டும் பணிகள் கடந்த ஒருவாரமாக நடந்து வந்துள்ளது. இந்த பணியில் 7 வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), நசீர் உசேன் (33), உஸ்மான் (36) ஆகியோர் நேற்றைய தினம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த 30 அடி உயர மண் சரிந்து விழுந்தது.

மண்ணுக்குள் புதைந்த 3 இளைஞர்கள்:

இதில், எதிர்பாராத விதமாக மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த 3 இளைஞர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் முதலில் அப்துல் ரகுமான் என்ற இளைஞர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!

பொக்லைன் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்:

இதனிடையே, மண்ணில் புதையுண்ட மற்ற இரண்டு இளைஞர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின், பொக்லைன் மூலம் மண் தோண்டப்பட்டு அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டனர். இதனை கண்டு அவர்களுடன் பணியாற்றி வந்த அவர்களது நண்பர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.