Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பலூனுக்கு காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பரிதாபமாக பலி – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Festival Tragedy : கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹூலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலூனுக்கு காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பரிதாபமாக பலி – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Jan 2026 21:12 PM IST

கள்ளக்குறிச்சி, ஜனவரி 19 : கள்ளக்குறிச்சி அருகே நடந்த ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹூலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் நடைபெற்று வந்த ஆற்று திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் (Accident), பலூன்களில் காற்று நிரப்ப பயன்படுத்தப்பட்ட ஹீலியம் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஹீலியம் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாப பலி

மணலூர்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆற்று திருவிழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டிருந்தனர். திருவிழா நிறைவடைந்து மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், குழந்தைகள் அதிகம் கூடியிருந்த ஒரு பலூன் கடையில் வைத்திருந்த ஹீலியம் வாயு சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அருகில் நின்றிருந்தவர்களை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : கழன்று ஓடிய அரசு பேருந்தின் பின் பக்க டயர்… சாலையோர பளத்தில் கழிந்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த விபத்தில் பலர் தூக்கி எறியப்பட்டதாகவும், அருகில் இருந்த கடைகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த 10 பேரை உடனடியாக மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார்  அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவிழாவையொட்டி பல தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளை கவரும் பலூன் கடைகளில் பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டர்களை கையாள்வதில் அலட்சியமாக செயல்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதையும் படிக்க : முடிந்தது விடுமுறை.. 20 கி.மீ வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை..

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்து நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது, கடைகளில் பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றப்பட்டுள்ளதா?, அனுமதி பெற்றுதான் பயன்படுத்தப்பட்டதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிழாவில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகள் குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த சம்பவம் இனி இது போன்று ஊர் திருவிழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.