Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிரடியாக விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்!

Commercial Gas Cylinder Price Reduced In Chennai | சென்னையில் இன்று (டிசம்பர் 01, 2025) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, 10 ரூபாய் 50 காசுகள் இந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையில் குறைந்துள்ளது.

அதிரடியாக விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Dec 2025 07:31 AM IST

சென்னை, டிசம்பர் 01 : சென்னையில் (Chennai) கடைகளில் பயன்படுத்தகூடிய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (Commercial Gas Cylinder Price) அதிரடியாக விலை குறைந்துள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், இன்று (டிசம்பர் 01, 2025) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் விலையை மாற்றி அமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். தற்போது 2025, டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதி கிடைக்கும்.. தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று, எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்துள்ளன. அதாவது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. இந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் முன்பு ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் மற்றும் 50 காசுகள் குறைந்து ரூ.1,739 மற்றும் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இனி 7 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் அப்டேட்.. ஆர்பிஐ-ன் அசத்தல் திட்டம்!

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

சென்னையை தொடர்ந்து மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.