Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில்கள்.. கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

3 Amrit Bharat trains Timetable: வந்தே பாரத் ரயில்கள் சேவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று நிலையில், தற்போது அதற்கு இணையாக அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மேற்குவங்கம் - தமிழ்நாடு இடையே 3 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தன.

தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில்கள்.. கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!
அம்ரித் பாரத் ரயில்கள் கால அட்டவணை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Jan 2026 07:49 AM IST

தமிழகம் – மேற்கு வங்காளத்திற்கு இடையேயான 3 அம்ரித் பாரத் ரயில்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையே மூன்று அம்ரித் பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 1,834 பேர் வரை பயணம் செய்யலாம். இதில், பக்தர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-புதிய ஜல்பைகுரி மற்றும் நாகர்கோவில்-புதிய ஜல்பைகுரி அம்ரித் பாரத் ரயில்களுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள்…எங்கு உள்ளது தெரியுமா!

தாம்பரம் – சந்திரகாச்சி:

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த மாதம் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) பிற்பகல் 3:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தில் உள்ள சந்திரகாச்சிக்குச் செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (வண்டி எண் 16107), மறுநாள் இரவு 8:15 மணிக்கு சந்திரகாச்சியைச் சென்றடையும்.

மாறாக, 24-ஆம் தேதி (சனிக்கிழமை மட்டும்) இரவு 11:55 மணிக்கு சந்திரகாசியிலிருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (16108), புறப்பட்ட 3-வது நாள் காலை 9:15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் எழும்பூர் வழியாகச் செல்லும்.

திருச்சிராப்பள்ளி – நியூ ஜல்பைகுரி:

ஜனவரி 28ஆம் தேதி (புதன்கிழமை மட்டும்) காலை 5:45 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தில் உள்ள நியூ ஜல்பைகுரிக்குச் செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (20610), புறப்பட்ட 3-வது நாள் காலை 5:00 மணிக்கு புதிய ஜல்பைகுரியை சென்றடையும்.

மாறாக, 30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை மட்டும்) நியூ ஜல்பைகுரியிலிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி வரும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (20609), புறப்பட்ட 3-வது நாள் மாலை 4:15 மணிக்கு திருச்சிராப்பள்ளியை வந்தடையும். இந்த ரயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் மற்றும் சூலூர்பேட்டை வழியாகச் செல்லும்.

நாகர்கோவில் – நியூ ஜல்பைகுரி:

நாகர்கோவிலிருந்து நியூ ஜல்பைகுரிக்குச் செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (20604), 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நான்காவது நாள் காலை 5 மணிக்கு நியூ ஜல்பைகுரியை சென்றடையும்.

இதையும் படிக்க: மேற்குவங்கம்-தமிழகம் அம்ரித் பாரத் ரயில்…புறப்படும் நேரம்…தேதி…அறிவிப்பு!

மறுபுறம், நியூ ஜல்பைகுரியிலிருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாராந்திர அம்ரித் பாரத் ரயில் (20603), 28ஆம் தேதி (புதன்கிழமை மட்டும்) மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட மூன்றாவது நாள் இரவு 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.