Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன.17ல் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஆரம்பகட்ட டிக்கெட் விலை தெரியுமா? முழு விவரம்!!

Vande Bharat sleeper train ticket price: இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே உண்டு. RAC முறை கிடையாது, Waiting List டிக்கெட்டும் கிடையாது. குறிப்பாக இந்த ரயில்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், ரயில்வே ஊழியர்கள் ஒதுக்கீடு போன்ற இடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

ஜன.17ல் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஆரம்பகட்ட டிக்கெட் விலை தெரியுமா? முழு விவரம்!!
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Jan 2026 14:10 PM IST

டெல்லி, ஜனவரி 14: உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்யும் வசதி கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்களில், தற்போது படக்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் அறிமுகமாகின்றன. இதற்கான முழுமையான கட்டண விவரத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஸ்லீப்பர் பெட்டிகளை கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 17 ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் குவாகாத்தி – கொல்கத்தா ரயில் பாதையில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஸ்லீப்பர் பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான தற்காலிக கட்டணம் குறித்த அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!!

குறைந்தபட்ச கட்டணம் 400 கி.மீக்கான கட்டணம்:

அதன்படி, மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையின் படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் முதல் வகுப்பு AC, இரண்டாம் வகுப்பு AC, மற்றும் மூன்றாம் வகுப்பு AC ஆகிய மூன்று வகைப்பெட்டிகள் மட்டுமே இருக்கும். எவ்வளவு குறைவான தூரம் பயணம் செய்தாலும், குறைந்தபட்ச கட்டண தூரம் 400 கி.மீ. ஆகும். அதாவது, பயணிகள் 400 கி.மீக்கு குறைவாக பயணம் செய்தாலும், அதற்காக கட்டணத்தை செலுத்த வேண்டும். அதுவே, குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

400 கி.மீ.வரை கட்டணம்:

அதன்படி, இந்த ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலில் 400 கி.மீ.வரை பயணம் செய்வதற்கான கட்டணமானது, முதல் AC வகுப்புக்கு – ரூ.1,520, இரண்டாம் AC வகுப்புக்கு – ரூ.1,240, மூன்றாம் AC வகுப்புக்கு – ரூ. 960 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 400 கி.மீ.க்கு மேல் பயணம் செய்தால், 1 கி.மீ.க்கு கூடுதல் கட்டணம் முதல் AC வகுப்புக்கு – ரூ.3.20, இரண்டாம் AC வகுப்புக்கு – ரூ.3.10, மூன்றாம் AC வகுப்புக்கு – ரூ.2.40 ஆகும். இதனுடன், கூடுதலாக ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

RAC மற்றும் காத்திருப்பு (WL) முறை  கிடையாது:

இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே உண்டு. RAC முறை கிடையாது, Waiting List டிக்கெட்டும் கிடையாது. குறிப்பாக இந்த ரயில்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், ரயில்வே ஊழியர்கள் ஒதுக்கீடு போன்ற இடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

கட்டணம் – மின்னணு முறையில் மட்டும்:

இந்த ரயில்களுக்கான கட்டணம் டிக்கெட் கவுண்டரில் வாங்கினாலும், டிஜிட்டல் முறையிலேயே கட்டணம் பெறப்படும். ஏனெனில், டிக்கெட்டை ரத்து செய்தால் 24 மணி நேரத்திற்குள் பணம் திருப்பி வழங்கப்படும். ஒருவேளை கார்டு அல்லது UPI போன்ற முறையில் டிக்கெட் கட்டணமளிக்க முடியாவிட்டால், வழக்கமான விதிப்படி பணிகளுக்கு ரீபண்ட் கிடைக்கும்.

இதையும் படிக்க: இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள்…எங்கு உள்ளது தெரியுமா!

கீழ்படுக்கை ஒதுக்கீடு:

தனி இருக்கை தேவைப்படாத குழந்தையுடன் பயணிப்பவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு முடிந்தவரை கீழ்படுக்கை தானாகவே ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்கி சில நாட்களுக்குப் பின்னர் பயணிகள் சேவை முழுமையாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.