சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற விருது விழாவில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது தோற்றத்தைவிட, அவர் அணிந்திருந்த மிக அரிய மற்றும் விலையுயர்ந்த வாட்ச் தான் அதிக பேசுபொருளானது. இந்த வாட்ச் பதினெட்டு காரட் வெள்ளை தங்கத்தில் தயாரிக்கப்பட்டு, பல வைரங்கள் மற்றும் நீல நிற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒளியின் மாற்றத்திற்கு ஏற்ப நிறம் மாறும் அம்சமும் இதில் உள்ளது. இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் பதின்மூன்று கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது.