இந்தியாவில் சர்க்கரை நோய் இனி ஒரு தனிப்பட்ட உடல்நலப் பிரச்னை மட்டும் அல்ல. இது தற்போது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச ஆய்வு ஒன்றின் படி, சர்க்கரை நோயால் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளது. இந்த ஆய்வு வெளியாகியுள்ள நேரத்தில், இந்தியா ஏற்கனவே உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடாக உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகில் உள்ள 828 மில்லியன் சர்க்கரை நோயாளிகளில், கால் பங்குக்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர்.