மத்திய அரசின் முக்கிய ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2030–31 நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், விவசாயிகள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு ஓய்வு கால பொருளாதார பாதுகாப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு பிறகு மாதம் ஆயிரம் ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்;