வீட்டில் தங்கம் வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த உச்சவரம்பையும் நிர்ணயிக்கவில்லை. நமது வருமானம், பரம்பரை சொத்தாக கிடைத்த தங்கம் அல்லது சேமிப்பின் மூலம் வாங்கிய தங்கமாக இருந்தால், எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்க சட்டப்படி அனுமதி உள்ளது. ஆனால், வருமான வரித்துறை சோதனையின் போது, ஆதாரம் காட்ட முடியாத நிலையில் கூட குறிப்பிட்டஅளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்படாது. திருமணமான பெண்ணிடம் ஐந்நூறு கிராம் வரை, திருமணம் ஆகாத பெண்ணிடம் இருநூறு ஐம்பது கிராம் வரை, மற்றும் ஆணிடம் நூறு கிராம் வரை தங்கம் இருந்தால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.