Rose Day History: காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது..? அதன் வரலாறும், முக்கியத்துவமும்..!
Valentine Week 2026: ரோஜா தினம் (Rose Day) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டாலும், எதனால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது என்று பலரும் அறிவதில்லை. அந்தவகையில், காதலர் வாரத்தில் ரோஜா தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 14ம் தேதி வரும் காதலர் தினம் காதலர்களுக்கு முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த காதல் நிறைந்த மாதத்தில், காதலர்கள் தங்களது மனதில் உள்ள காதலை முழுமையாக வெளிப்படுத்த காதலர் வாரத்தை (Valentine Week) பயன்படுத்தி கொள்கிறார்கள். காதலர் வாரம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7ம் தேதியான இன்று ரோஜா தினத்துடன் கொண்டாடப்படுகிறது. ரோஜா தினம் (Rose Day) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டாலும், எதனால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? காதலர் வாரம் ஏன் ரோஜா தினத்துடன் தொடங்குகிறது என்று பலரும் அறிவதில்லை. அந்தவகையில், காதலர் வாரத்தில் ரோஜா தினத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.
ALSO READ: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?
ரோஜா தினத்தின் வரலாறு என்ன..?
காதலர் வாரத்தில் ரோஜா தினத்தின் வரலாறு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், இது பாசத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை பரிசளிப்பதன் மூலம் தங்கள் அன்பை முதலில் பரிமாறி கொள்கிறார்கள். இந்த பழக்கத்தை முதன் முதலில் விக்டோரியர்கள் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. ரோமானிய புராணங்களின்படி, ரோஜா காதல் மற்றும் அன்பின் அடையாளமாக கருதப்பட்டது. இத்தகைய நாளில் தம்பதிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்த அன்பானவர்களுக்கு ரோஜாக்களை பரிசுகளாக பரிமாறியுள்ளனர்.




20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காதலர் வாரத்தின் ஒரு பகுதியான ரோஜா தினத்தை கொண்டாடும் பாரம்பரியம் தொடங்கியது. அதன்படி, காதலர்களுக்கு ரோஜா தினம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ரோஜா வழங்குவது உறவுகளை வலுப்படுத்தும் என்றும், காதலை பலப்படுத்தும் என்று நம்பப்பட்டது.
ரோஜா நிறத்தின் அர்த்தம் என்ன..?
சிவப்பு ரோஜா – அன்பின் சின்னம்
சிவப்பு ரோஜா காதல் மற்றும் ஆர்வத்தின் வலிமையான அடையாளமாகக் கருதப்படுகிறது. இது ஆழமான, உண்மையான மற்றும் முற்றிலும் அர்ப்பணிப்புள்ள அன்பைக் குறிக்கிறது. நீங்கள் உண்மையிலேயே நேசிக்கும் நபருக்கு இது சிறப்பாகக் கொடுக்கப்படுகிறது.
வெள்ளை ரோஜா – அமைதி மற்றும் தூய்மையின் சின்னம்
வெள்ளை ரோஜாக்கள் தூய்மை, நேர்மை மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கின்றன. அவை திருமணங்களுக்காக, உறவுகளின் தொடக்கத்திற்காக அல்லது தவறான புரிதலுக்குப் பிறகு நல்லிணக்கத்தைக் குறிக்க வழங்கப்படுகின்றன.
மஞ்சள் ரோஜா – நட்பின் சின்னம்
மஞ்சள் ரோஜாக்கள் மகிழ்ச்சியையும் நட்பையும் வெளிப்படுத்துகின்றன. காதல் அழுத்தம் இல்லாமல் நட்புக்கிடையேயான அரவணைப்பையும் புன்னகையையும் பகிர்ந்து கொள்ள அவை ஒரு வழியாகும்.
ALSO READ: ரோஜாவுடன் தொடங்கும் காதலர் தின வாரம்.. எந்த நாளில் என்ன கொண்டாட வேண்டும்?
இளஞ்சிவப்பு ரோஜா – நன்றி மற்றும் மகிழ்ச்சியின் சின்னம்
இளஞ்சிவப்பு ரோஜாக்கள் பாராட்டு மற்றும் நன்றியுணர்வைக் குறிக்கின்றன. ஆழமான இளஞ்சிவப்பு நிறங்கள் நன்றியுணர்வைப் பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில், வெளிர் இளஞ்சிவப்பு நிறங்கள் மென்மையான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. புதிய உறவுகள் அல்லது உங்களுக்கு சிறப்பு வாய்ந்த உறவுகளுக்கு இது ஒரு அழகான தேர்வாகும்.