Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Monsoon Home Care Tips: மழைக்காலத்தில் சுவர்களில் ஈரப்பதமா..? வீட்டைப் பாதுகாக்கும் 5 எளிய வழிகள்..!

Beat Monsoon Dampness: மழைக்காலத்தில் வீட்டில் ஏற்படும் ஈரப்பதத்தால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? காற்றோட்டம், உப்பு/கரி பயன்பாடு, நீர்காப்பு பூச்சு, மரச்சாமான்களை சுவரில் இருந்து விலக்கி வைத்தல், காற்றை வெளியேற்றும் விசிறி போன்ற எளிய வழிமுறைகளால் வீட்டை ஈரப்பதம் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம்.

Monsoon Home Care Tips: மழைக்காலத்தில் சுவர்களில் ஈரப்பதமா..? வீட்டைப் பாதுகாக்கும் 5 எளிய வழிகள்..!
மழைக்கால ஈரப்பதம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2025 17:08 PM

கோடைக்காலத்திற்கு பிறகு வரும் மழைக்காலம் (Monsoon) ஆறுதலையும், குளிர்ச்சியையும் தரும். ஆனால், அதேநேரத்தில் வீட்டிற்குள்ளும், வெளியேயும் ஈரப்பதம் எனப்படும் பொதுவான பிரச்சனை ஏற்படும். அதன்படி, வீட்டின் சுவர்கள், தரைகள் மற்றும் வீட்டின் மேற்பரப்புகள் மீது ஈரப்பதம் படிவதால் வீட்டின் அழகு பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் (Health) தீங்கு விளைவிக்கும். இந்த ஈரப்பதம் பூஞ்சையாக உருவெடுத்து ஆஸ்துமா (Asthma), ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். இப்படியான மோசமான சூழ்நிலையில், நாம் சிக்கிகொள்ளாமல் இருக்க சரியான நேரத்தில் சரியான தீர்வைப் பயன்படுத்துவதன் மூலம், மழைக்காலத்தில் வீட்டை ஈரப்பதம் மற்றும் துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்கலாம். ஈரப்பதம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வீட்டில் ஈரப்பதத்தால் நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டால், இவற்றை செய்து உங்கள் வீட்டை வீடு வறண்டதாகவும், புத்துணர்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் மாற்றலாம்.

காற்றோட்டம்:

கனமழையின்போது அதிகபடியான ஈரப்பதம் உங்கள் வீட்டிற்குள் தங்க தொடங்கும். இந்த நேரத்தில், உங்கள் வீட்டிற்குள் காற்று சுழற்சி இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. மழையின்போது வீட்டை தொடர்ந்து மூடி வைப்பதை பலரும் செய்கிறார்கள். ஆனால், இப்படி செய்வது ஈரப்பதத்தை ஊக்குவிக்கிறது. புதிய காற்று மற்றும் சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும் வகையில் ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைப்பது உங்களையும், உங்கள் வீட்டையும் பாதுகாக்கும்.

ALSO READ: பிரிட்ஜின் வாழ்நாள் நீட்டிக்க வேண்டுமா..? மழைக்கால ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கும் உப்பு..!

உப்பு அல்லது கரி:

வீட்டிற்குள் இருக்கும் ஈரப்பதத்தை நீக்க, ஒரு கிண்ணத்தில் உப்பு அல்லது கரியை வைக்கலாம். இது சுவர் உள்ளிட்ட வீட்டிற்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இவை இரண்டும் இயற்கையாகவே ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. உங்கள் வீட்டின் சுவரில் அதிகபடியாக ஈரப்பதம் படியும் என்றால் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை அதை மாற்றிக்கொண்டே இருப்பது நல்லது.

நீர்காப்பு பணிகள்:

ஒவ்வொரு ஆண்டும் ஈரப்பதமாக இருக்கும் சுவர்களில் சிமென்ட் அடிப்படையிலான நீர்காப்பு பெயிண்ட் அல்லது பூச்சுகளை பயன்படுத்துவது நல்லது. இவை உங்கள் வீட்டின் சுவர்களை நீண்ட காலத்திற்கு ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கும்.

மரச்சாமான்களை தள்ளி வையுங்கள்:

மழைக்காலத்தில் உங்கள் வீட்டின் சுவரில் ஈரப்பதம் படியுமானால் மரச்சாமான்களுக்கும் சுவருக்கும் இடையில் காற்று இருக்காது. இதனால், உங்கள் மரச்சாமான்கள் பூஞ்சை மற்றும் பூஞ்சை காளான் போன்றவற்றால் பாதிக்க தொடங்கும். அதன்படி, மரச்சாமான்களை சுவரிலிருந்து குறைந்தது நான்கு முதல் ஐந்து அங்குல தூரத்தில் வைக்கவும்.

ALSO READ: மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாம்பா..? என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? முழு விவரம்!

காற்றை வெளியேற்றும் ஃபேன்:

குளியலறைகள், ஸ்டோர்ரூம்கள் மற்றும் சமையலறைகள் மிக விரைவாக ஈரப்பதமாகிவிடும். அத்தகைய இடங்களில் காற்றை வெளியேற்றும் ஃபேன்களை வைக்கலாம். மேலும், இப்போதெல்லாம் சந்தையில் கையடக்க ஈரப்பதமூட்டிகள் கிடைக்கின்றன. இவை அறையில் ஈரப்பதத்தை வெளியேற்றுகின்றன.